திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பனப்பாளையத்தை சேர்ந்தவர் தேவராஜ். தனது வீட்டின் வெளியே நேற்று இரவு பைக்கை நிறுத்திவிட்டு தூங்க சென்றுள்ளார். இன்று காலை எழுந்து வந்து பார்த்தபோது பைக்கை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கத்தினர் இளைஞர்கள் சிலர் பைக்கை திருடி சென்றதாக கூறிய நிலையில், அவர்கள் சொன்ன திசையில் மற்றொரு பைக்கில் தேவராஜ் பைக் திருடர்களை துரத்தி சென்றுள்ளார்.

தாராபுரம் பிரிவு அருகே, தேவராஜ் தங்களை துரத்தி வருவதை பார்த்த பைக் திருடர்கள் அதிர்ச்சியில் முன்னாள் சென்ற புல்லட் பைக் மீது மோதினர். விபத்தில் சிக்கி கீழே விழுந்தனர். மீண்டும் பைக்கை எடுத்து தப்பிக்கும் போது, தேவராஜ் திருடன், திருடன் பிடியுங்கள் என கூச்சலிட்டுள்ளார்.
இதையும் படிங்க: போட்டோவால் மிரள வைத்த ஷாக்ஷி... கல்யாணம் தமிழ்நாடு.. ஹனிமூன் மாலத்தீவு..!

உடனே அங்கிருந்த மக்கள் அவர்களை விரட்டினர். ஒருவன் தப்பிவிட, மற்றொருவன் மட்டும் மாட்டுக்கொண்டான். அவனை கட்டி வைத்து பொதுமக்கள் அடி வெளுத்து வாங்கினர். பின்னர் அவனை பல்லடம் போசிலில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற நபர் மதுரை சேர்ந்த அரவிந்த்ராஜ் என்பது தெரிந்தது. மக்கள் கொடுத்த அடியில் படுகாயம் அடைந்த அரவிந்தராஜை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர். மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அரவிந்தராஜை அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: 25-என பொய் சொன்ன 38! 17 வயது கல்லூரி மாணவிக்கு காதல் வலை.. போக்சோவில் தட்டிதூக்கிய போலீஸ்..