தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜயை அவர் பாணியிலேயே what Bro, why Bro என கலாய்த்த பாஜக நிர்வாகி சரத்குமார், ஒருமையிலும் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூரில் தனியார் திருமண மண்டபத்தில் பாஜகவினர் சார்பில் நடைபெற்ற சமத்துவ விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் சரத்குமார் நிகழ்ச்சியின் நிறைவாக செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது,ஆயிரம் அமித்ஷா வந்தாலும் தமிழகத்தில் எந்தமாற்றத்தை ஏற்படுத்த முடியாது என விமர்சித்த காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகையின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த அவர் சொல்ல வேண்டிய அவசியம் இல்லையெனவும், ஈவிகேஎஸ் இளங்கோவன் இறந்த பிறகு அந்த தொகுதியை காங்கிரஸிற்கு வாங்கிக்கொடுக்க முடியாதவருக்கு பதில் சொல்ல தேவையில் என்றார்.

இதையும் படிங்க: விஜய் மீது குறையாத பாசம்… ஆனாலும் முட்டிக்கொண்டது எப்படி? உருகி உருகி விளக்கிய சீமான்..!
தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சட்ட ஒழுங்கு பிரட்சனைகளை மறைக்கவும் மக்கள் நிகழ்ந்து வரும் குற்ற சம்பவங்களை கேள்வி கேட்காமல் இருக்க மும்மொழி பிரச்சனை,இந்தி திணிப்பு,தொகுதி மறுசீரமைப்பு என மக்களை திமுக அரசு திசை திருப்புவதாகவும் குற்றம் சாட்டினார். மத்திய அரசின் மும்மொழி கொள்கையில் இந்தி திணிப்பு இல்லை எனவும், மையினால் இந்தி எழுத்துக்களை அழிப்பதால் இந்தியை அழிக்கவும் முடியாது எனவும் கூறினார். அதே போல் நான்காயிரம் ஆண்டு பழமை வாய்ந்த தமிழ்மொழியையும் யாராலும் அழிக்க முடியாது என்றார்.

பாஜக மாநில தலைவர் பதவி மேல் தனக்கு ஆசையில்லை எனத் தெரிவித்த சரத்குமார், கட்சிக்காக கடைசி வரை உழைப்பேன் உழைத்து கொண்டே இருப்பேன் எனவும், அண்ணாமலை மீண்டும் மாநில தலைவராக பொறுப்பேற்ற பிறகு அவரை தமிழக முதல்வர் இருக்கையில் அமர வைக்க பாடுபடப்போவதாகவும் தெரிவித்தார்.
நடிகர் விஜய் செய்தியாளர்களை சந்திக்க தயங்குவதாகவும், திமுக போன்ற கட்சிகள் சொல்வதில் உள்ள உண்மை தன்மையை ஆராயாமல் அது மக்களை பாதிக்கும் என்பதை அறியாமல் பேசிவருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

கூட்டத்தின்போது மேடையில் பேசிய சரத்குமார் மும்மொழி கொள்கை விஷயத்தில் பாஜக -வும் திமுக வும் கபட நாடகம் ஆடுது, நம் ஆளுங்க இடையிலே பூந்து சம்பவம் செய்திட்டான் What Bro என்று பேசிய விஜய்க்கு பதிலடி கொடுத்த சரத்குமார்,
நடிகர் விஜயை அவர் பாணியிலேயே இந்தி மொழி உங்களுக்கு தேவையில்லை ஆனால் நீங்கள் அரசியல் செய்ய இந்தி பேசும் பிரசாந் கிஷோர் தேவைப்படுகிறார். “what Bro, why Bro, டேய் என்னங்கடா” என்று ஒருமையில் சாடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: முதல்வர் ஸ்டாலினுக்கு தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து!