குஜராத்தில் ராகுல் காந்தி தனது சொந்த கட்சித் தலைவர்களையும், தொண்டர்களையும் பாஜகவுக்கு வேலை செய்வதாக அம்பலப்படுத்தியதால், காங்கிரஸ் கட்சிக்குள் அரசியல் சூடுபிடித்துள்ளது. ராகுலின் பேச்சுக்கு திக்விஜய் சிங் பாராட்டுக்களை தெரிவிக்கும் அதேவேளை எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும்ம, மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங் தனது எக்ஸ்தளப்பதிவில்,''ராகுல் காந்தியின் அறிக்கைக்கு நான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மத்தியப் பிரதேச முதலமைச்சராக குஜராத்தில் பிரச்சாரம் செய்யச் சென்றபோது, ஆர்.எஸ்.எஸ் சங்கத்திற்கு எதிராகப் பேச வேண்டாம் என்று எனக்கு அறிவுறுத்தப்பட்டது எனக்கு நினைவிருக்கிறது.

இந்துக்கள் கோபப்படுவார்கள். ஆர்.எஸ்.எஸ். சங்கம் இந்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவது இல்லை. அவர் மதத்தின் பெயரால் இந்துக்களை தவறாக வழிநடத்தி சுரண்டுகிறார்கள். இந்துக்களின் மதத் தலைவரான சங்கராச்சாரியார், ஆயிரக்கணக்கான ஆண்டுகால பாரம்பரியத்தைக் கொண்டுள்ளார். அது இன்றும் உள்ளது. அவர்களில் எந்த சங்கராச்சாரியார் இன்று பாஜக- ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்?
இதையும் படிங்க: மொதல்ல பிஜேபி ஆட்களை துரத்துங்க...காங்கிரஸ் கட்சிக்கு துரோகம்- ராகுல் காந்தி ஆவேசம்..!
மதத்தின் பெயரால் மக்களைக் கொள்ளையடித்து அதிகாரத்தைப் பெறுவதே ஒரே குறிக்கோளாகக் கொண்ட சுரண்டல் சக்திகளின் குழு பாஜக'' என திக்விஜய் சிங் கூறியுள்ளார். அவரது ட்விட்டில் காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், பவன் கேரா மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரையும் டேக் செய்துள்ளார்.

நேற்று அகமதாபாத்தில் ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றிய ராகுல் காந்தி, ''காங்கிரசில் தலைவர்களுக்கு பஞ்சமில்லை. காங்கிரசில் சிங்கங்கள் உள்ளன, ஆனால் அவை கட்டப்பட்டு சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுள்ளன. பாதி பேர் பாஜகவுக்காக வேலை செய்கிறார்கள். திருமண ஊர்வலத்தில் காங்கிரஸ் பந்தயக் குதிரையை நிறுத்துகிறது. சிலரை நீக்க வேண்டியிருந்தால், அவர்கள் நீக்கப்பட வேண்டும்.

தலைவர்கள் பொதுமக்களுடன் இணைய வேண்டும்.பாரத் ஜோடோ யாத்திரையில் இதைச் செய்துள்ளோம். நமது தலைவர்கள் மக்களிடம் செல்ல வேண்டும். நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி இருந்தால்,30-40 பேரை அகற்ற வேண்டி இருந்தால், அவர்களை அகற்ற வேண்டும். பாஜகவுக்காக மக்கள் உள்ளே இருந்து வேலை செய்தால், அவர்களை நீக்குங்கள்'' எனக் கடுமையாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்த ஆவேசப்பட்டு இருந்தார்.
இதையும் படிங்க: வீர் சாவர்க்கர் பற்றி சர்ச்சை பேச்சு... ராகுலுக்கு ரூ.200 அபராதம்..! நீதிமன்றம் கடும் எச்சரிக்கை..!