அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கும் இடையிலான வார்த்தைப் போர் உலகையே ஆச்சரியப்படுத்தி உள்ளது. ஜெலென்ஸ்கியும், டொனால்ட் டிரம்பும் சண்டையிடுவது வீடியோவில் பதிவாகி உள்ளது. இதுபோன்ற விவாதங்கள் ராஜதந்திர உலகில் நடந்தாலும், அவை தலைவர்களுக்கு இடையேயான மூடிய கதவுகளுக்குள் நடைபெறும். இப்போது இருதரப்பு சந்திப்புகளின் போது வெட்டவெளியில் நிகழ்கின்றன. ஆனால் வெள்ளை மாளிகையில் நடந்தவை டொனால்ட் டிரம்பின் ஆட்சியின் மீதான அமெரிக்காவின் நட்பு நாடுகளின் நம்பிக்கையை உலுக்கியுள்ளன.

குறிப்பாக, இது இப்போது நேட்டோ நாடுகளிடையே கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். நேட்டோ என்பது ஒரு இராணுவக் கூட்டணி. இதில், பிற நாடுகளுக்கு அமெரிக்கா மிகப்பெரிய பங்களிப்பை வழங்குகிறது. டொனால்ட் டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் இருந்தே நேட்டோவிற்கு அமெரிக்கா நிதியளிப்பதில் தீவிரமாக இருந்து வருகிறார்.
இதையும் படிங்க: அமெரிக்காவில் பாகிஸ்தானின் ஆடம்பர ஹோட்டல்… 'விளையாட்டு'க்கு ஆப்பு வைத்த டிரம்ப்..!
"ஓவல் அலுவலகத்தில் சண்டை வருவதற்கு முன்பே டொனால்ட் டிரம்புக்கும், வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கும் இடையிலான உறவுகள் ஏற்கனவே விரிசல் அடைந்திருந்தன. டிரம்ப் முன்பு ஜெலன்ஸ்கியை ஒரு சர்வாதிகாரி என்று அழைத்தார். உக்ரைன் போரைத் தொடங்கியது என்றும் கூறினார். ஜோ பைடன் நிதியளித்த உக்ரைன்-அமெரிக்க கூட்டணி இப்போது துண்டு துண்டாக சரிந்து வருகிறது. உக்ரைன்-அமெரிக்க கூட்டணியின் பொது முறிவு, நேட்டோவின் ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்காவிற்கும் இடையே ஒரு பெரிய நெருக்கடியைக் கொடுக்கும் வகையில் உள்ளது.
டொனால்ட் டிரம்புக்கும், ஜெலென்ஸ்கிக்கும் இடையிலான வாக்குவாதம் ஐரோப்பிய நாடுகளை உலுக்கியிருக்கலாம். ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கான அமெரிக்காவின் பல்லாண்டு கால அர்ப்பணிப்பு இப்போது கேள்விக்குறியாகவும், சந்தேகமாகவும் இருக்கிறது. ''1949 ஆம் ஆண்டு நேட்டோ நட்பு நாடு மீதான தாக்குதல் அமெரிக்காவின் மீதான தாக்குதலாகக் கருதப்படும்" என்று முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் அளித்த வாக்குறுதியை ஜனாதிபதி டிரம்ப் நிறைவேற்றுவாரா? என்கிற மிகப்பெரிய சந்தேகம் எழுந்துள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடனான உறவை மீட்டெடுக்க டொனால்ட் டிரம்ப் தலைகீழ் திசையில் ஓடுகிறார் என்பதும், இதற்காக அவர் உக்ரைன், ஐரோப்பாவின் பாதுகாப்பில் எந்த கவனமும் செலுத்தவில்லை என்பதும் ஐரோப்பிய நாடுகளின் மனதில் மிகப்பெரிய கவலையாக மாறியுள்ளது.
டொனால்ட் டிரம்ப் உக்ரைன் மீது ஒரு உடன்பாட்டை எட்ட அழுத்தம் கொடுத்துள்ளார். உக்ரைன் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், அமெரிக்கா வெளியேறும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அவர் உக்ரைன் அதிபரை 'சமரசம்' செய்வதற்காக அழைப்பு விடுத்துள்ளார். அவரது அமைதி திட்டத்தில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்கத் தடைகளை நீக்குவதும் அடங்கும். ஐரோப்பிய நாடுகளின் மீது அமெரிக்காவுக்கு இவ்வளவு அவநம்பிக்கை இதற்கு முன்பு இருந்ததில்லை.

டொனால்ட் டிரம்பின் மிகப்பெரிய கோபம், ஜெலென்ஸ்கி, ரஷ்யாவிற்காக எந்தவிதத்திலும் விட்டுக்கொடுக்க மறுத்தார் என்பதே. இது தவிர, உக்ரைனின் அரிய கனிம வளங்கள் தொடர்பான ஒப்பந்தத்தில் டொனால்ட் டிரம்புடன் கையெழுத்திடவும் ஜெலென்ஸ்கி மறுத்துவிட்டார். உக்ரைனுக்கு, அமெரிக்கா இதுவரை அளித்த அனைத்து உதவிகளையும் திரும்பப் பெற டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.இதற்காக, உக்ரைனின் கனிம வளத்திற்கான ஒரு உடன்பாட்டை அடைந்தே தீர வேண்டும் என கடுமையாக முயற்சிக்கிறார் ட்ரம்ப்.
இது அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைக்கு மிகப்பெரிய சோதனை. உக்ரைன் மக்கள் தங்கள் தேசிய பாதுகாப்பில் அச்சுறுத்தலில் இருப்பதாகவும், இதை தடுத்து நிறுத்தப்படாவிட்டால் புடின் எந்த எல்லைக்கும் செல்வார் என்றும் நம்புகிறார்கள். இதனால்தான் ஜெலென்ஸ்கி உக்ரைனின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்குமாறு மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் டொனால்ட் டிரம்புடனான சந்திப்பின் போது, அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தலையிட்டார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.

அரசியல் பார்வையாளர்கள் இதை நன்கு திட்டமிடப்பட்ட கொள்ளை என்று கூறுகிறார்கள். இதில் ஜெலென்ஸ்கி அமெரிக்காவின் கட்டளைப்படி நடக்க வேண்டியிருக்கும். இல்லையெனில் நெருக்கடி அதிகரிக்கும். இதற்கு ஜெலென்ஸ்கி மட்டுமே பொறுப்பேற்க வேண்டும். அவர் மீதே அனைத்து குற்றம் சாட்டுகளும் சுமத்தப்படும். அமெரிக்க உதவி இல்லாவிட்டாலும் ஜெலென்ஸ்கி போரைத் தொடர முடிவு செய்தால், எவ்வளவு காலம் இந்தப் போரில் அவரால் போராட முடியும் என்பது முக்கிய கேள்வி. இப்படிப்பட்ட சூழ்நிலையில், உக்ரைனின் ஐரோப்பிய நட்பு நாடுகள் உக்ரைனுக்கு எப்படி உதவப்போகின்றன? மிகப்பெரிய கேள்வி நேட்டோவின் எதிர்காலம் பற்றியதாக இருக்கும்.
இதையும் படிங்க: போர் எதிரொலி...ஐ.நா. தீர்மானத்தை நிராகரித்தது இந்தியா!