நாம் தமிழர் கட்சியை கூட்டணிக்கு இழுக்கும் அதிமுக-வின் முயற்சியை முறியடிக்க தவெக தலைவர் விஜய் தரப்பில் சீமானுக்கு துாது அனுப்பிய தகவல் வெளியாகி உள்ளது.
வரும் சட்டசபை தேர்தலுக்கு தவெக-வுடன் கூட்டணி அமைக்க, அதிமுக தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தனித்து போட்டி அல்லது தன் தலைமையில்தான் கூட்டணி என தவெக தலைவர் விஜய் கூறியதால், கூட்டணி அமைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், வரும் 28ம் தேதி சென்னை திருவான்மியூரில் நடக்கும் தவெக பொதுக்குழுக் கூட்டத்தில் கூட்டணி குறித்து இறுதி முடிவெடுக்க விஜய் திட்டமிட்டு உள்ளார். அடுத்து 'பூத்' கமிட்டி நிர்வாகிகள் மாநாடு, தஞ்சாவூரில் இருந்து நடைபயணம் தொடக்கம் உள்ளிட்ட முடிவுகளும், பொதுக்குழுவில் எடுக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: புஹாஹா... சீமானை சந்திக்க தவமிருக்கும் விஜய் தரப்பு... மான் கராத்தே ஆடும் தவெக..?
உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் வீட்டுக்கு ஒரு ஓட்டு உறுதி என்ற கணக்கில் 234 தொகுதிகளில் 25 சதவீதம் ஓட்டு கிடைக்கும் என விஜய்க்கு அவரது வியூக வகுப்பாளர்கள் நம்பிக்கை கொடுத்துள்ளனர். ஆனாலும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க கூடுதலாக, 15 சதவீதம் ஓட்டுகள் பெறுவது அவசியம். அதற்கு கூட்டணி முக்கியம் என விஜய்க்கு தவெக கட்சியின் ஆலோசகர் எடுத்து ஓதி இருக்கிறார்.

இதையடுத்து, நாதக உள்ளிட்ட சில சிறிய கட்சிகளை சேர்த்து கூட்டணி அமைக்கலாம் என கணக்கு போட்டு, சீமானை சந்திக்க, விஜய் தரப்பில் முயற்சித்து இருக்கிறார்கள். விஜயின் தவெக வியூக வகுப்பாளர்களில் ஒருவரான ஜான் ஆரோக்கியசாமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்திக்க நேரம் கேட்டு காத்திருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால், இதுவரை யாருடனும் கூட்டணி வைத்ததே கிடையாது. ஆனால், இனிமேல் வைப்பதாக முடிவு எடுத்தாலும்கூட நான் சொல்லும் சில நபர்கள் பேச்சுவார்த்தையின் போது உடனிருப்பார்கள் என்று சீமான் தரப்பில் சொல்லப்பட்டு இருக்கிறது. குறிப்பாக இந்தச் சந்திப்பின்போது ஒரு அரசியல் விமர்சகர் உடன் இருக்க வேண்டும் அவரது பெயரையும் சொல்லி இருக்கிறார் சீமான்.

கூட்டணிக்கு நாங்கள்தான் தலைமை தாங்குவோம் என்றும், எங்களுடைய சிலை நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், உதாரணமாக 50 சதவீதம் பெண்களுக்கு சீட்டு மாதிரியான விஷயங்களை சமரசப்படுத்தக் கூடாது என்று சொல்லி இருக்கிறதாம் சீமான் தரப்பு. இதைக் கேட்டு ஜான் ஆரோக்கியசாமியே அதிர்ச்சியாக, அதனை விஜய் காதுக்கும் அவர் கொண்டு சென்று இருக்கிறார்.
இதையும் படிங்க: துபாயில் தவெக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி.. கலந்துக்கொண்ட தமிழக நடிகர்!!