கேரளாவின் பழங்குடி மக்களின் மன்னராக இருபவர் ராமன் ராஜாமன்னன். இவர்தான் டெல்லியில் நடந்த 76-வது குடியரசு தின நிகழ்ச்சியில் தனது மனைவி பினுமோலுடன் சென்று பங்கேற்றார். மன்னன் சமூகத்தின் உயர்ந்த கலாச்சாரம், மக்களின் பின்பற்றும் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை இந்த குடியரசுத் தின நிகழ்ச்சியில் வெளிப்படுத்தப்பட்டது. பழங்குடி மன்னர் ராமன் ராஜாமன்னன் குடியரசுத் தின நிகழ்ச்சியில் பங்கேற்று மீண்டும் கேரளா வரும்வரை அனைத்து போக்குவரத்து செலவுகளையும் கேரள எஸ்சி,எஸ்டி, ஓபிசி பிரிவு நலத்துறை செய்துள்ளது. குடியரசுத் தின நிகழ்ச்சிகளை கண்டுகளித்து, பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பிப்ரவரி 2ம் தேதி கேரளாவுக்கு மன்னன் சமூகத்தினர் திரும்புகிறார்கள். இந்த குடியரசு தின நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை கேரள அமைச்சர் ஓஆர் கேளு, பழங்குடி மன்னனிடம் வழங்கியதைத்தொடர்ந்து அவர் டெல்லி புறப்பட்டார்.
கேரளாவில் இருக்கும் ஒரே பழங்குடி மன்னன் ராமன் ராஜாமன்னன் மட்டும்தான். மன்னருக்கான பாரம்பரிய ஆடை அணிந்து, தலையில் தலைப்பா அணிந்து, குடியரசு தின நிகழ்ச்சியில் பங்கேற்றார். இவர்களுக்கு துணையாக இருஅமைச்சர்களும், சிப்பாய்களும் உடன் சென்றனர். கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் 48 இடங்களில் 300 பழங்குடி குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த குடும்பங்களுக்கு மன்னராக இருப்பவர் ராமன் ராஜாமன்னன். இந்த சமூகத்தின் பண்டிகைகள், திருவிழாக்களில் மன்னர் பங்கேற்று, ஏற்பாடுகளைச் செய்வது இன்னும் கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 2012ம் ஆண்டு மன்னர் ஆர்யன் ராஜாமன்னன் மறைவையடுத்து, ராமன் மன்னன் பொறுப்புக்கு வந்தார்.

மிகவும் எளிமையான வாழ்க்கையை நடத்தும் ராமன் மன்னன், பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். எளிமையான வீட்டில் வசிக்கும் ராமன், விவசாயம் செய்து வருகிறார். மன்னர் குடும்பத்துக்கென தனியாக பரம்பரை கோயில் இருக்கிறது, இந்தக் கோயிலில்தான் பழங்குடி மக்கள் வழிபாடு நடத்துவர், இந்த கோயிலை பராமரிக்கும் பொறுப்பு ராமன் மன்னரிடம் இருக்கிறது.
இப்போதுள்ள சமூகத்தில் மன்னருக்கான தனித்துவ உரிமைகள் ஏதுமில்லை. ஆனால், தங்களின் சமூகத்து பிரச்சினைகள், சிக்கல்களை மன்னரே தீர்த்து வைக்கும் பழக்கத்தை மக்கள் கடைபிடிக்கிறார்கள்.
இதையும் படிங்க: கேரள விளையாட்டு வீராங்கனை பாலியல் பலாத்காரம்: 5 ஆண்டுகளாக தொடர்ந்த கொடூரம்: இதுவரை 57 பேர் கைது
மன்னருக்கு துணையாக 4 துணை மன்னர்களும், இளையராஜாவும், 50 அமைச்சர்கள் எனப்படும் கன்னிகளும் உள்ளனர். இன்னும், 100 ஆண்டுகளுக்கு முந்தைய பாரம்பரியத்தையே தங்களின் சமூக வழக்கில் பின்பற்றி வருகிறார்கள். பெண்களை முன்னிலைப்படுத்தும் பரம்பரையை முறையை மன்னன்சமூகத்தினர் கடைபிடித்து வருகிறார்கள். பெண்களுக்கு சொத்தில் உரிமையும், பங்கும், வாரிசு உரிமையும் மன்னன் சமூகத்தில் வழங்கப்பட்டுள்ளது. தனித்துவமான அம்சங்களை இந்த மன்னன் சமூகம் கொண்டிருந்தால், முற்போக்கு மற்றும் முழுமையான கலாச்சார அம்சங்களை வைத்துள்ளது.
இதையும் படிங்க: முல்லைப் பெரியாறு அணை வழக்கு: கேரளாவின் கோரிக்கை நிராகரிப்பு; "பாதுகாப்பாக உள்ளது; "ஆய்வு செய்ய தேவையில்லை";உச்சநீதிமன்றம் அதிரடி