நெல்லை டவுன் பகுதியில் கடந்த 18ஆம் தேதி அன்று ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியான ஜாகிர் உசேன் என்பவர் தொழுகை முடித்து வீட்டிற்கு செல்லும் போது மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றவாளிகள் விரைவில் கண்டுபிடிக்கப்பட்ட உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டசபையில் தெரிவித்திருந்தார்.

முன்னதாக ஜாகிர் உசேனின் உறவினர்கள் குற்றவாளிகளை பிடிக்கும் வரையில் விரைவில் விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு இடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாகிர் உசேன் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற தௌவ்பீக் என்பவருக்கும் ஜாகிர் ஹுசைனுக்கும் நில பிரச்சனை இருந்து வந்த நிலையில் ஜாகிர் உசேன் படுகொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதையும் படிங்க: மெக்சிகோவின் தரமான செய்கை... உச்சக்கட்ட பதற்றத்தில் டிரம்ப்!!

இந்த வழக்கில் தவ்பீக் இன் தவ்ஃபீக் மற்றும் அவரது சகோதரர் கார்த்திக் மனைவி நூர் நிஷா மற்றும் அக்பர் ஷா ஆகிய நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் கார்த்திக் மற்றும் அக்பர் ஷா ஆகியோர் சம்பவம் நடந்த அன்றே நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த கிருஷ்ணமூர்த்தியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு மடக்கி பிடித்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவருக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கார்த்திக் மற்றும் அக்பர்ஷாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த விசாரணையில் பல துடிக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

அதில் அவர்களது உறவினரான 16 வயது சிறுவன் ஒருவர் இந்த கொலை சம்பவத்தில் உடந்தையாக செயல்பட்டது விசாரணையில் அம்பலமானது. ஜாகிர் உசேன் காலையில் தொழுகை முடித்துவிட்டு அவரது நடமாட்டத்தை தொலைபேசி மூலம் கொலையாளிகளுக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிறுவனிடம் போலீசார் நேற்று விசாரணை மேற்கொண்ட மேற்கொண்டபோது, ஜாகிர் ஹுசைனின் நடமாட்டத்தை கொலையாளிகளுக்கு தெரிவித்தது உறுதியானது. முன்னதாக அந்த சிறுவன் நெல்லை டவுன் பகுதியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வரும் நிலையில், போலீசார் அந்த சிறுவனை சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். தொடர்ந்து தலைமுறைவாகியுள்ள கிருஷ்ணமூர்த்தி மனைவியான நூர் நிஷாவை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க ஜாகிர் ஹுசைனின் மகனான இச்சூர் ரகுமான், கொலை சம்பவத்தில் தொடர்புடைய நான்காவது குற்றவாளியான கிருஷ்ணமூர்த்தியின் மனைவி இன்றளவும் கைது செய்யப்படவில்லை என்றும் தொடர்ந்து மார்பு நபர்களால் நாங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறோம் என்றும் என் தந்தைக்குப் பின்னர் என்னை கொலை செய்ய நினைக்கிறார்களோ என்று வீடியோ ஒன்றை பதிவு செய்து அவரது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது மாநில முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை.. போக்சோ நீதிமன்றம் உத்தரவு..!