பூங்காவுக்கு விளையாடச் சென்ற 13 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தனியார் நிறுவன காவலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை அண்ணாநகர் பகுதிக்கு உட்பட்ட பூங்காவுக்கு விளையாடச் சென்ற 13 வயது சிறுமியை, தனியார் நிறுவன காவலாளி கோவிந்தா சார்கி என்பவர், கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக, அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி, குற்றம் சாட்டப்பட்ட கோவிந்தா சார்கி மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க: மாணவிகளிடம் அத்துமீறிய தலைமையாசிரியர்.. ஹோலி பண்டிகையில் இப்படியா? கண்ட இடத்தில் கலர் பூசி அட்டூழியம்..!
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: மார்க் வேணுமா? வேலை வேணுமா? மாணவிகளை சீரழித்த பேராசிரியர்.. 30 மாணவிகளின் 60 ஆபாச வீடியோ..!