அசாம்-மேகாலயா எல்லையில் அமைந்துள்ள பிரைனிஹத் நகரம் தான் உலகிலேயே காற்றுமாசு நிறைந்த நகரமாக ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த காற்று தர தொழில்நுட்ப நிறுவனமான ஐகியூஏர் வெளியிட்ட உலக காற்று தரம் அறிக்கை 2024ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரைனிஹித் நகரில் காற்றின் தரம் சராசரிக்கும் குறைவாக பிஎம் 2.5 அளவு சரிந்துள்ளது. 2024ம் ஆண்டில் 7 சதவீதம் காற்றின் தரம் குறைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசாம் மேகாலயா எல்லையில் வேகமாக வளர்ந்துவரும் தொழில்நகராக பிரைனிஹித் இருந்து வருகிறது. இங்கு தொழிற்சாலைகள் அதிகரித்துவரும் அளவுக்கு, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை, கழிவுகளை கட்டுப்படுத்தவோ அல்லது ஒழுங்குபடுத்தவோவிதிகள் இல்லை. இந்த நகரில் ஏராளமான ஸ்டீல் தொழிற்சாலை, இரும்பு தொழிற்சாலை, சிமெண்ட் தொழிற்சாலை, குளிர்பான நிறுவனங்கள், ரசாயனத் தொழிற்சாலைகள் இருப்பதால் காற்று மாசு கட்டுக்கடங்காமல் இருந்து வருகிறது.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிராக மும்முனைத் தாக்குதல்: பாகிஸ்தான்- வங்கதேசத்துடன் சேர்ந்து அடித்து ஆடும் சீனா..!
இங்குள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியும் வாயு நச்சுத்தன்மையுடையதாக, காற்றில் கலந்து காற்றின் தரம் பிஎம் 10 அளவுக்கு மோசமாகியுள்ளது, இதில் டிரக்குகள், லாரிகள் சரக்குகளை கொண்டு செல்லும்போது வெளியிடும் புகையும் சேர்ந்து நகரை புகைமண்டலமாக மாற்றுகிறது.

டெல்லியில் காற்று மாசு இன்னும் குறைந்தபாடில்லை, இங்கு சராசரியாக ஒரு கியூபிக்மட்டரில் 91.6 அளவில் மாசு இருக்கிறது, கடந்த ஆண்டிலிருந்து 2024வரை காற்றின் தரம் மேம்படவில்லை.
உலகளவில் 20 நகரங்கள் அதிக காற்று மாசுள்ள நகரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் 13 நகரங்கள் இந்தியாவில்தான் உள்ளன. முதலாவதாக அசாம்-மேகாலயா எல்லையில் அமைந்துள்ள, பிரைனிஹித் நகரம். அடுத்ததாக, டெல்லி, பஞ்சாபில் முலான்பூர், ஃபரிதாபாத், லோனி, புதுடெல்லி, குருகிராம், கங்காநகர், கிரேட்டர் நொய்டா, பிவாடி, முசாபர்நகர், ஹனுமான்ஹார்க், நொய்டா நகரங்கள் அதிக மாசடைந்த நகரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்திய நகரங்களில் 35 சதவீதம் ஆண்டுத்து பிஎம்.25 அளவில் இருந்து 10 மடங்கு கூடுதலாக மாசை வெளியிடுவதாக உலக சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது. இந்தியாவில் காற்று மாசு அதிகமான உடலநலக் கோளாறுகளை ஏற்படுத்தி வருகிறது, மக்களின் வாழ்நாள் 5.2 ஆண்டுகள் காற்று மாசால் குறைகிறது என்று லேன்செட் மருத்துவ இதழ் தெரிவித்துள்ளது.
லேன்செட் மருத்துவ இதழின்அ றிக்கையில் “ இந்தியாவில் 2009 முதல் 2019 வரை ஒவ்வொரு ஆண்டும் 15 லட்சம் பேர் காற்று மாசால் ஏற்படும் உடல்நலக்கோளாறால் உயிரிழந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளது.

பிஎம்2.5 என்பது, காற்றில் சிறிய அளவிலான 2.5 அளவுக்கும் குறைந்த மைக்ரோன்கள் இருப்பதைக் குறிப்பதாகும். இந்த சிறுதுகள்கள் நுரையீரல், ரத்தத்தில் கலந்து, சுவாசக்கோளாறுகளை ஏற்படுத்துகின்றன, இதயநோய் மற்றும் புற்றுநோயையும் ஏற்படுத்துகின்றன. வாகனங்களில் இருந்து வெளிவரும் புகை, தொழிற்சாலை புகை, வேளாண் கழிவுகளை எரிப்பதால் வரும் புகை ஆகியவை காற்று மாசு அதிகரிக்க காரணமாக உள்ளன.
இதையும் படிங்க: புது ரூட்டெடுத்த சீனா.. இந்தியாவுக்கு வளர்ச்சி..? அமெரிக்காவுக்கு சிக்கல்!!