கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கு திருமணமான நிலையில் கணவர் துபாயில் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் எந்த இளம் பெண் தனித்து வசித்து வந்துள்ளார்.
இதனை அறிந்த அதே பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவர், மது போதையில் இளம் பெண்ணின் வீட்டிற்கு சென்று இளம் பெண்ணுக்கு பாலியல் ரீதியான தொந்தரவில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து இளம் பெண் கத்தி கூச்சலிடையே அவர் கத்தியை காட்டி கொலை செய்து விடுவேன் மிரட்டல் விடுத்துள்ளார்.

மேலும் இளம் பெண்ணை கத்தியை காட்டி மிரட்டியதுடன், பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் வீடியோவை காட்டி மிரட்டி இளம் பண்ணை அவ்வப்போது பாலியல் ரீதியான துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார் சிவகுமார்.
இதையும் படிங்க: இரு இளைஞர்கள் புதைக்கப்பட்ட கொடூரம்.. விசாரணை தீவிர படுத்திய போலீசார்
இதனைத் தொடர்ந்து சிவகுமார் அவரது நண்பரான வினோத் குமாருக்கும் வீடியோவை அனுப்பி இளம் பெண்ணை மிரட்டியுள்ளனர். தொடர்ந்து வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக இருவரும் மிரட்டி இளம் பெண்ணிடம் 50,000 ரூபாய் ரொக்க பணமும் மூன்று பவுன் தங்க நகைகளையும் வாங்கியதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ந்து போன அந்த இளம் பெண், இது குறித்து கம்மாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இளம் பெண்ணின் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் சிவகுமார் மற்றும் வினோத்குமார் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதனை அடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரையும் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 3ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. இளைஞர் போக்சோவில் கைது!