தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது நாள் பூத் கமிட்டி மாநாடு இன்று மதியம் 2.30 மணிக்கு தொடங்க உள்ளது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று பேச உள்ளார். கரூர், திருப்பூர், நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வர தொடங்கியுள்ள நிலையில், தீவிர சோதனைகளுக்குப் பிறகு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். ஒவ்வொருவராக சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளே அனுமதிப்பதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையும் படிங்க: தொண்டர்கள் செய்த தரமான சம்பவம்.. தவெக நிர்வாகிகள் மீது வழக்கு..!

விஜய் இந்த பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்க உள்ள நிலையில், அவரைக் காண தொண்டர்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர். கூட்டம் அரங்கிற்கு அருகே ஏராளமான தொண்டர்கள் குவிந்து பவுன்சர்களுடன் மல்லு கட்டி வருகின்றனர்.

ஏற்கனவே நேற்று கோவை வந்தடைந்த விஜயை வரவேற்க விமான நிலையத்தில் குவிந்த தொண்டர்கள் பொருட்களை சேதப்படுத்தியதாகவும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் கூறி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், இன்று இரண்டாவது நாளான இன்றும் ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

கூட்டத்தை கட்டுப்படுத்த கேரளாவில் இருந்தும் பவுன்சர்கள் குவிக்கப்பட்டுள்ள நிலையில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.
இதையும் படிங்க: தவெக தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு.. ஸ்தம்பித்தது கோவை..!