சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் 3வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் நடத்தி வரும் கட்டுமான நிறுவனத்தில் பணப்பரிவர்த்தனையில் முறையீடு நடந்திருப்பதாகவும், பல கோடி ரூபாய் வரியைப்பு செய்யப்பட்டிருப்பதாகவும் புகார்கள் எழுந்திருந்தன. இது தொடர்பாக அமலாக்கத் துறையினர் ஏற்கனவே சோதனை நடத்த இருந்தனர்.
இதையும் படிங்க: பெண் உதவியாளருடன் காருக்குள் பதுங்கி... மீண்டும் நேருவின் தம்பியை கொத்தாக தூக்கிச் சென்ற ED..!

இந்த நிலையில் வருமானவரித் துறையினர் அளித்த அறிக்கையின் அடிப்படையில், ஏப்ரல் 7ஆம் தேதி அமைச்சர் கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். திருச்சி தில்லைநகர் 5-வது குறுக்கு தெருவில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டிற்கு, 10-க்கும் மேற்பட்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் துணை ராணுவ படையினருடன் உடன் சென்றனர்.
அமைச்சர் நேரு, அவரது மனைவி ஆகியோர் சென்னையிலும், அவரது மகன் பெரம்பலூர் எம்.பி. அருண் நேரு டெல்லியிலும் இருப்பதாக கூறப்பட்ட நிலையில்,பாரதி நகரில் வசிக்கும் நேருவின் மகள் ஹேமா, அவரது கணவர் ஆனந்த் ஆகியோரை அமலாக்கத் துறையினர் அழைத்து வந்து சோதனையை தொடங்கினர். தொடர்ந்து சென்னை, ஆர்.ஏ.புரத்தில் பிஷப் கார்டன் பகுதியில் உள்ள ரவிச்சந்திரன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. மேலும், ரவிச்சந்திரனை விசாரணைக்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.

இந்த நிலையில் 3 வாது நாளாக ரவிச்சந்திரன் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சென்னை அடையாறு காந்தி நகரில் உள்ள டி.வி.ஹெச். நிறுவன இயக்குநர் ரமேஷ் வீட்டிலும் 3வது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடைப்பெற்று வருகிறது.
இதையும் படிங்க: தமிழில் பெயர் பலகை.. மீறினால் அபராதம்.. அனைத்து நிறுவனங்களும் உறுதி செய்ய ஆட்சியர் உத்தரவு..!