உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த குடும்பத்தினர் காரில் கோயிலில் வழிபாடு செய்வதற்காக ராஜஸ்தான் நோக்கி சென்றுள்ளனர். ஜெய்ப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிரெதிரே சென்று கொண்டிருந்த கார் மற்றும் லாரி மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரில் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பெயர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதில் ஒரு வயது குழந்தை பலியான சம்பவம் கூடுதல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து.. கணவன், மனைவி பலி..!

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காரிலிருந்து ஐந்து பேர் உடல்களையும் கைப்பற்றி அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: துக்க வீடான திருமண வீடு.. மகள் திருமணத்தன்று பலியான தாய்.. கதறி துடித்த மணப்பெண்..