புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்துள்ள பெரிய குடும்பப்பட்டி காயம் பாய் அய்யனார் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்ற சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று காலை 9 மணி அளவில் தொடங்கப்பட்ட இந்த போட்டியில் முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது.
தொடர்ந்து திருச்சி புதுக்கோட்டை மதுரை, கரூர் திண்டுக்கல் தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்துவரப்பட்டு போட்டியில் பங்கு பெற்றன. முன்னதாக கால்நடை மருத்துவர்கள் பரிசோதனைக்கு பிறகு வாடிவாசலில் இருந்து காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டது.

வாடிவாசலில் இருந்து சீறி பாய்ந்த காளைகளை, பலம் பொருந்திய வீரர்கள் அடக்கி அசாத்திய விளையாட்டினை வெளிப்படுத்தினர். சில காளைகளில் பிடிபட்டாலும் பல காளைகள் மாடுபிடி வீரர்களுக்கு பெரும் சவாலாக அமைந்தது. ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதற்காக சுற்றுப்புற கிராமங்களில் இருந்து கிராம மக்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க: நாண்மதிய பெருமாள் கோவில் தீர்த்தவாரி.. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்..!
போட்டி வெகுவீரியம் கொண்ட நிலையில், ஐந்து மாடுபிடி வீரர்கள் மாடு குத்தியதில் படு காயமடாந்தனர். காயமடைந்த மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

முன்னதாக போட்டியில் பங்கேற்ற வீரர்கள் சிறந்த மற்றும் சிறந்த காளைகளுக்கு பீரோ கட்டில், பொருட்களும் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களும் பரிசாக வழங்கப்பட்டது. முன்னதாக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: வாடியில் தேங்கிய மழைநீர்.. ஜல்லிக்கட்டு போட்டியின்றி களை இழந்த கோயில் திருவிழா!