விராலிமலை பட்ட மரத்தான் கோயிலில் மாசி மாதம் நடைபெறும் திருவிழாவானது ஏராளமான பக்தர்கள் கூட்டத்துடன் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். காலை பூஜைகள், மண்டல பூஜைகள், சாமிக்கு கிடாய் வெட்டு, கலை நிகழ்ச்சிகள் என திருவிழா களைகட்டும்.
குறிப்பாக, பட்டமரத்தான் கோயிலில் மாசி மாத திருவிழாவை ஒட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதும் வழக்கம். இந்த ஆண்டும் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

ஆனால் நிகழாண்டு வாடிவாசல் அருகே உள்ள திடலில் அதிக அளவில் நீர் தேங்கி இருந்ததால் போட்டி நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதை வழக்கமாகக் கொண்ட ஊர் மக்கள் தற்போது இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற வேண்டும் என அதிக அளவில் எதிர்பார்ப்புகளை கொண்டிருந்தனர்.
இதையும் படிங்க: திருச்செந்தூரில் களைகட்டிய மாசி திருவிழா.. வெட்டிவேர் சப்பரத்தில் சுவாமி எழுந்தருளல்!
அதன்படி சம்பிரதாயமாக வாடிவாசலில் கோயில் காளை மட்டும் அவிழ்க்க விடப்பட்டது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட காளையை கொட்டடித்து, கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பூஜைக்கு பின்னர் வாடிவாசலில் இருந்தது. முன்னதாக கோயில் காளை என்பதால் வீரர்கள் யாரும் மாடை அடக்கம் முன் வரவில்லை.
இதையும் படிங்க: மாரியம்மன் கோயிலில் களைகட்டிய குடமுழக்கு விழா.. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்