கடலூர் மாவட்டம் வண்டுராயன்பட்டு கிராமத்தில் அரசு விதை பண்ணையில் புதிய கட்டிடம் கட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணிகளில் வட மாநிலத்தவர்கள் ஏராளமானோர் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் வட மாநிலத்தவர்கள் மீது சந்தேகம் அடைந்து சோதனையில் ஈடுபட்டனர். விசாரணையில் 8 வட மாநிலத்தவர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதனை எடுத்து அனைவரையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டது. அப்போது அவர்கள் எட்டு பேரிடமும் போலியான ஆதார் கார்டு இருந்தது தெரிய வந்தது. மேலும் உரிய ஆவணங்கள் இன்றி எட்டு பேரும் தங்கி இருந்து கட்டிட வேலையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையும் படிங்க: பணிக்கு வராத அரசு மருத்துவர்..? வேறு டாக்டர் வைத்து சிசேரியன்.. பிறந்த 10 நிமிடத்தில் இறந்த குழந்தை..!

இதையடுத்து அவர்கள் அனைவரும் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த முகமது மிராட் அலி, முகமது அப்துல்லா, முஹம்மது ஆரிப் கோசன், முகமது மின்னருல் ஹக், முகமது சிவில் அலி, முகமது ராம்சன் அலி, முகமது மிராசுல் இஸ்லாம் மற்றும் அவல்சேக் என்பது தெரியவந்தது தொடர்ந்து போலீசார் அவர்களிடத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: விஜயை எதிர்த்து தேர்தலில் போட்டி: ‘புலி’படத் தயாரிப்பாளரை களமிறக்கும் திமுக..?