கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இந்திய வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு ஆராய்ச்சி நிறுவனம் அமையப்பெற்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் வனத்துறைக்கான உதவியாளர்கள் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மேலும் இதற்கான எழுத்து தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் கோவையில் உள்ள வன மரபியல் கல்லூரியில் நடைபெற்றது. பல்வேறு கட்டமைப்புகள் மற்றும் சோதனைகளுக்கு பின்னரே மாணவ மாணவியர் இந்த தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் முதன்மை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று நேர்முகத் தேர்வு நடைபெற இருந்தது. அப்போது, நேர்முகத் தேர்வில் பங்கேற்க வரும் மாணவ மாணவியர்களிடம் அவர்கள் எழுத்து தேர்வின் போது சமர்ப்பிக்கப்பட்ட புகைப்படம் மற்றும் கைரேகைகள் நேர்முகத் தேர்வின் போது சரிபார்க்கப்பட்டது.
இதையும் படிங்க: சேலத்தில் குவியும் பண மோசடி வழக்குகள்.. கதறும் மக்கள்.. விசாரணையை தீவிரப்படுத்திய போலீஸ்..!
அப்போது குறிப்பிட்டு எட்டு மாணவ மாணவியர்களின் கைரேகை மற்றும் புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டதிலிருந்து மாறுபட்டு இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் எட்டு மாணவ மாணவியரிடிம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் எட்டு மாணவ மாணவியரும் எழுத்து தேர்வின் போது வால்மாராட்டம் செய்ததும், அவர்கள் அனைவரும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் அம்பலமானது. இது குறித்து மத்திய அரசின் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் இயக்குனர் குனிக் கண்ணன் கோவை சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் எட்டு பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். முன்னதாக இவர்கள் தேர்வு எழுதுவதற்கு வேறு யாரேனும் உதவினார்களா அல்லது இந்த சம்பவத்தில் மேலும் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: பணியால் சுளப்பட்ட ஏற்காடு.. புகைப்படம் எடுத்து ரசித்த சுற்றுலாப் பயணிகள்..