குளித்தலை அருகே திருக்காம்புலியூரில் ரயில் தண்டவாளம் விரிசல் ஏற்பட்டு உடைந்தது. எர்ணாகுளம் - காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயில் 100 மீட்டர் தூரத்தில் கொடியசைத்து நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கரூர் மாவட்டம், குளித்தலை அருகே திருக்காம்புலியூர் பகுதியில் கரூர் - திருச்சி ஒரு வழி ரயில் பாதையில் ரயில்வே தண்டவாளம் விரிசல் ஏற்பட்டு உடைந்துள்ளது.

இந்நிலையில் அதன் அருகே குடியிருந்து வரும் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் காலைக்கடன் கழிப்பதற்காக அந்த பகுதிக்கு சென்ற நிலையில் உடைப்பு ஏற்பட்டதை பார்த்துள்ளார். உடனடியாக இருப்பு பாதை சரி பார்க்கும் ஊழியர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 7 ஆயிரம் பெண்கள், மகா கும்ப மேளாவில் துறவறம் பூண்டனர்; பெரும்பான்மையினர் பட்டதாரிகள்
அவர்கள் வந்து பார்த்து உடைப்பு ஏற்பட்டதை அறிந்து ரயில் சென்றால் விபத்து ஏற்படும் என தெரிந்து கொண்டனர்.அந்த நேரத்தில் எர்ணாகுளத்தில் இருந்து காரைக்கால் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்துள்ளது. உடனடியாக அங்கு இருந்த ஊழியர்கள் சிவப்பு கொடிய அசைத்து விரைவு ரயிலலை நிறுத்தியுள்ளனர். உடைப்பு ஏற்பட்ட அருகே 100 மீட்டர் தூரத்தில் அந்த ரயில் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தண்டவாளத்தில் உடைப்பு பகுதியை தற்காலிகமாக ஊழியர்கள் சீரமைத்தனர். வாஸ் கோ முதல் வேளாங்கண்ணி விரைவு ரயில் ஈரோடு - திருச்சி பாசஞ்சர் ரயில் ஒரு மணி நேரம் காலதாமதத்துடன் புறப்பட்டன. உடைப்பு ஏற்பட்ட தண்டவாளத்தை ரயில்வே ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மத்திய பட்ஜெட்டால் யாருக்கு பலன்? நடுத்தர குடும்பத்தினரா, கோடீஸ்வரர்களா? புள்ளிவிவரங்களை அடுக்கிய ப.சிதம்பரம்