தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த ஜோதிகா தற்போது ஆழமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில் வெப் சீரிஸ் ஒன்றில் ஜோதிகா சிகரெட் பிடிப்பதை போல் இருக்கும் காட்சி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சூர்யா, ஜோதிகா தம்பதி என்றாலே தமிழ் திரையுலகில் தனி மரியாதை இருப்பவர்கள். திருமணத்திற்கு பிறகு மீண்டும் ஒருசில திரைப்படங்களில் நடித்த ஜோதிகா தனக்கு முக்கியத்துவம் கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் மலையாளத்தில் மம்மூட்டியுடன் காதல் தி கோர் படத்தில் ஜோதிகா நடித்திருந்தார். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து இந்தியில் ஸ்ரீகாந்த் மற்றும் சைத்தான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து பாலிவுட் இணைய தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இதையும் படிங்க: காளி அவதாரத்தில் மிரட்டும் விமல்... ஓடிடி வெளியிட்ட சூப்பர் டீசர்!!
அப்படி டப்பா கார்டெல் என்ற வெப் சீரிஸில் ஜோதிகா நடித்துள்ளார். நெட்பிளிக்ஸில் கடந்த 28ம் தேதி வெளியான இந்த வெப் ரீசிஸ் கலவையான விமர்சனங்களை பெற்றது. குறிப்பாக இதில் ஜோதிகா புகை பிடிக்கும் காட்சிகளில் நடித்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து ஜோதிகாவா இதுபோன்ற காட்சிகளில் நடிப்பது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ராட்சசி, நாச்சியார் போன்ற கேரக்டர்களில் நடித்த ஜோதிகா புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்ததால் எதிர்மறை விமர்சனங்கள் எழுந்துள்ளன.
திருமணமாகி இரு குழந்தை பெற்றுக்கொண்ட ஜோதிகா முழு ஹவுஸ் ஒய்ஃபாக மாறியதால் சினிமாவிலிருந்து விலகி இருந்தார். சில ஆண்டுகளுக்கு பிறகு 36 வயதினிலே படத்தில் கம்பேக் கொடுத்தார். தனது இரண்டாவது இன்னிங்ஸில் ஹீரோயின் ஓரியன்டட் சப்ஜெக்ட்டாக தேர்ந்தெடுத்து நடித்தவர் இப்படி சர்ச்சையில் சிக்கி இருப்பது அவரது கெரியரை பாதிக்கும் என பலரும் அட்வைஸ் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அடுத்த பிரமாண்டம்… கண்ணப்பா படத்தின் டீசரை பார்த்து வியந்த ரசிகர்கள்!!