தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகை ராதிகா. ராடன் பிக்சர்ஸ் என்ற ஒரு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் ஏராளமான தொலைக்காட்சி தொடர்களையும் தயாரித்து வருகிறார்கள் இவர் தயாரித்த தொடர்களை மிகவும் புகழ்பெற்றது சித்தி தொடர்...

1999 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சித்தி சீரியல் 2001 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் பாகமும் ஆரம்பிக்கப்பட்டு வெளியானது. இதனை தொடர்ந்து அண்ணாமலை என்ற தொடரும் ராதிகாவால் இயக்கப்பட்டது.
இதையும் படிங்க: சென்னையில் தொடரும் அவலம்.. மீண்டும் ஒருவரை கடித்த ராட்வீலர்.. என்னாச்சு மாநகராட்சி உத்தரவு?

ராதிகா தயாரிக்கும் தொடர்களில் யார் இருக்கிறார்களோ இல்லையோ ஒரு நடிகர் நிச்சயம் இருப்பார். அவர் வேறு யாரும் இல்லை பிரபல குணச்சித்திர நடிகர் ரவிக்குமார் தான். சித்தி மற்றும் அண்ணாமலை ஆகிய இரு தொடர்களிலும் ராதிகாவுக்கு அப்பாவாக நடித்தவர் ரவிக்குமார்.கிட்டத்தட்ட நூறு படங்களுக்கு மேல் ரவிக்குமார் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்ல மலையாளத் திரைப்படங்களிலும் நடித்துள்ள அவர், திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளார்.

கேரள மாநிலத்தை சேர்ந்த ரவிக்குமார் கே. பாலசந்தர் இயக்கத்தில் கடந்த 1977ம் ஆண்டு வெளியான அவர்கள் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தார். கிட்டத்தட்ட நூறு படங்களுக்கு மேல் அவர் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்ல. மலையாள திரைப்படங்களிலும் பெருமளவில் அவர் நடித்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக அவரை எந்த ஒரு படங்களிலும் தொடர்களிலும் பார்க்க முடியவில்லை. ஆனால் இன்று அவருடைய மறைவு செய்தியை கேட்டு அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். அவருக்கு கேன்சர் நோய் இருந்ததனால் உடல்நலக் குறைவு ஏற்பட்டு இன்று அவர் காலமாகி இருக்கிறார். இது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், சென்னை வேளச்சேரியில் உள்ள மருத்துவமனையில் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்த ரவிக்குமார் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிர் விழுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இவரது மறைவு அவரது ரசிகர்களையும் திரையுலகினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் வக்கீல் சடலம்.. தலையில் பதிந்திருந்த அரிவாள்.. விருகம்பாக்கத்தில் பயங்கரம்..!