கனடாவின் பிரபல நடிகை லிசா ரே. இவரது தந்தை இந்தியாவை சேர்ந்தவர். தாய் போலந்தை சேர்ந்தவர். இவர் 1990களின், மாடலிங் தொழிலைத் தொடர்ந்தார். பின்னர் இந்தியாவுக்குச் சென்ற அவர், மாடலிங் துறையில் பெரிய இடத்திற்கு சென்றார். இயக்குனர் பாரத் ரங்காச்சாரியின் ஹன்ஸ்தே கெல்டே (1994) திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்திலும் அவர் நடித்து திரையுலகிலும் அறிமுகமானார்.

பின்னர் 1996 ஆம் ஆண்டு நுஸ்ரத் ஃபதே அலி கான் இசையமைத்து ஜாவேத் அக்தர் எழுதிய "அஃப்ரீன் அஃப்ரீன்" என்ற புகழ்பெற்ற இசை வீடியோவில் நடித்ததன் மூலம் அவர் மிக பிரபலமானார். மேலும் இவர் யுவராஜா (கன்னடம், 2001), கசூர் (2001), டக்காரி டோங்கா (தெலுங்கு, 2002), வாட்டர் (2005), டிஃபெண்டர் (ஆங்கிலம், 2009) மற்றும் வீரப்பன் ( 2016) உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: பயணிகள் பாதுகாப்பில் இவ்ளோ அலட்சியமா? வீல் சேர் தர மறுத்த ஏர் இந்தியா.. நடந்து சென்ற மூதாட்டி கீழே விழுந்து காயம்..!

இந்த நிலையில் சமீபத்தில் ஏர் இந்திய நிறுவனத்துடனான தனது கசப்பான அனுபவத்தை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ஏர் இந்தியாவை டேக் செய்திருந்தார். மேலும் அதில், என் தந்தைக்கு 92 வயது, உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார், அவரது உடல்நிலை காரணமாக நான் பயணத்தை ரத்து செய்ய வேண்டியுள்ளது.

மருத்துவர்களின் கடிதத்தை சமர்ப்பித்தேன், ஆனாலும் எனக்கான ரீபண்ட் மறுக்கப்பட்டது ஏன்? பயணிகளைப் பற்றி அக்கறை கொண்டதாகக் கூறும் ஒரு விமான நிறுவனத்திற்கு பச்சாதாபம் இல்லையா? என்று அவர் கேள்வி எழுப்பினார். இதுமட்டுமின்றி பயண நிறுவனத்துடனான லிசாவின் உரையாடலின் ஸ்கிரீன் ஷாட்டையும் அவர் வெளியிட்டுள்ளார். மேலும் லிசாவின் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தொடர்பான படத்தையும் அவர் பகிருந்திருந்தார்.
இதையும் படிங்க: ஒரு குப்பைத்தொட்டிக் கூட இல்லாத நகராட்சி.. கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பிய மனித உரிமை ஆணையம்..!