கன்னியாகுமரியில் குப்பைகளை சேகரிக்க ஒரு குப்பை தொட்டி கூட அமைக்காத புகாரில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர், தமிழக அரசின் நகராட்சி நிர்வாக துறை இயக்குனர், நகராட்சி நிர்வாகத்துறை திருநெல்வேலி மண்டல இயக்குனர் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் குப்பைகளை சேகரிக்க ஒரு இடத்தில் கூட குப்பை தொட்டி அமைக்கப்படவில்லை என அப்பகுதியை சேர்ந்த சதிஷ் என்பவர் மனித உரிமை ஆணையத்திற்கு கடிதம் மூலம் புகார் அனுப்பி இருந்தார்.
இதையும் படிங்க: 16 ஆண்டுகள் "லிவ் இன்" உறவில் இருந்தாலும் கற்பழிப்பு புகார் கூற முடியாது... உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!
இந்த கடித்ததில், திடக்கழிவு மேலாண்மை வரியை நகராட்சி மக்களிடம் வசூலித்து விட்டு ஒரு குப்பை தொட்டி கூட அமைக்காமல், மக்களுக்கு நோயை உருவாக்கும் சூழ்நிலை உருவாக்குவது மனித உரிமை மீறல் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடித்தத்தின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், இந்த விவகாரத்தை விசாரணை மேற்கொண்டு, கொல்லங்கோடு நகராட்சியில் குப்பைகளை முறையாக மேலாண்மை செய்யாதது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர், தமிழக அரசின் நகராட்சி நிர்வாக துறை இயக்குனர், நகராட்சி நிர்வாகத்துறை திருநெல்வேலி மண்டல இயக்குனர் ஆகியோர் 6 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தார்.
இதையும் படிங்க: கிறிஸ்தவ மதத்திற்கு மாறாததால் வெறுப்பான கணவன்… ஏற்காத மனைவிக்கு நேர்ந்த கொடூரம்..!