தமிழில் இவர் நடித்த 'முதல்வன்' 'பம்பாய்' 'இந்தியன்' போன்ற படங்களில் அவருடைய நடிப்பையும் நடனங்களையும் நாம் மறந்திருக்க முடியாது.
தமிழில் இவர் பிரபலமான கதாநாயகியாக திகழ்ந்த போது, பட்டிமன்ற பிரபலமான ஐயா சாலமன் பாப்பையா அவர்கள், டிவி நிகழ்ச்சி ஒன்றில் அவரைப் பற்றி குறிப்பிடும் போது "மனிஷா கொய்ராலா ...மனசை கொய்ராலா"என நகைச்சுவையுடன் குறிப்பிட்டது இன்றும் நினைவில் இருக்கிறது.
இடையில் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர் மன உறுதியுடன் போராடி தற்போது முழுமையான குணம் அடைந்து வந்திருக்கிறார்.
இதையும் படிங்க: சுஜாதா டச் மிஸ்ஸிங்… சரசரவென சறுக்கும் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் பிராண்ட்..!
இந்த நிலையில், 'ஃப்ரீ பிரஸ் ஜர்னல்' நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "வயதானாலும் கதாநாயகர்கள் மட்டும் தொடர்ந்து நாயகர்களாகவே நடித்து வருகிறார்கள். ஆனால், நாயகிகளை வயதாகிவிட்டது என்ற ஒரே காரணத்திற்காக வயதான பாத்திரங்களுக்கு தள்ளி விடுகிறார்கள்" என்று தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்து இருக்கிறார்.

"சினிமா உலகில் வயது என்பது ஒரு பிரச்சினையே அல்ல. அது வெறும் நம்பர் மட்டும் தான். கதாநாயகர்களின் வயதை யாரும் கண்டு கொள்வதில்லை. 60 ஐ தாண்டினாலும் அவர்கள் இளம் நாயகர்கள் ஆகவே நடித்து வருகிறார்கள்.
ஆனால் கதாநாயகிகளை மட்டும் அவர்களுடைய வயதை வைத்து விமர்சிக்கிறார்கள். அவர்களுக்கு தாயார், சகோதரி போன்ற வேடங்கள் தான் கொடுத்து வருகின்றனர். எங்களைப் போன்ற வயதான நடிகைகளும் எந்த பாத்திரத்தை கொடுத்தாலும் அதை சிறப்பாக செய்யும் திறமை படைத்தவர்கள்' என்றும், அந்த பேட்டியில் மனம் திறந்து இருக்கிறார், அவர்.
தொடர்ந்து பேசிய அவர், "அதிரடி ஆக்சன் கதாபாத்திரங்களில் கூட வயதான நடிகைகள் அசத்தி வருகிறார்கள். இதற்கு முன்பு எத்தனையோ மூத்த கதாநாயகிகள் இதை நிரூபித்து இருக்கிறார்கள். நானும் எப்படிப்பட்ட கதாபாத்திரம் என்றாலும் அதை சவாலாக எடுத்துக் கொண்டு நடிப்பேன். புதிய புதிய கதாபாத்திரங்களில் நடித்து எனது திறமையை நிரூபிக்க விரும்புகிறேன்.
வாழ்க்கையில் வயது என்பது வெறும் நம்பர் மட்டும் தான்; 50 வயதை கடந்தும் நாம் அற்புதமான வாழ்க்கையை வாழ முடியும். எவ்வளவு காலம் வாழ்ந்தாலும் சந்தோசமாக ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்" என்றார்.

வயது குறித்த வெட்கமா!
மனிஷா கொய்ராலா மேலும் பேசுகையில், "வயதானதால் ஏற்படும் வெட்கம்" குறித்தும் தனது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்தார். வயது முதிர்வால் சிறிது காலம் தான் திரையுலகை விட்டு ஒதுங்கி இருந்தது பற்றியும்" அவர் அப்போது குறிப்பிட்டார்.
"அடிக்கடி சிலர் என்னிடம் 'புத்தி' (வயதானவர் )ஆகிவிட்டதாக சொல்கிறார்கள். வயது காரணமாக என்னைப் போன்ற நடிகர்கள் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியது இருக்கிறது.
ஒரு உரையாடல் நிகழ்ச்சியின் போது இதே காரணத்திற்காக நான் ஓரம் கட்டப்பட்டேன். அதற்கு அவர்கள் சொன்ன காரணம், இது ஒரு குறிப்பிட்ட வயதை பற்றியது என்பதுதான். அதற்கு நான் கேட்டேன் "சரி சக ஆண் நடிகரும் அதே வயதில் இருந்திருந்தால் அவரை இதுபோன்ற நிகழ்ச்சியில் இருந்து ஒதுக்கி இருக்கிறீர்களா?" என்று. ஆனால் அவர்களிடம் இருந்து இதற்கு சரியான பதில் இல்லை.
"உயிருடன் இருக்கும் வரையில், இன்னும் மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க முடியும்; இருக்க வேண்டும்; அதுவே எனது குறிக்கோள்" என்றும் அவர் நம்பிக்கையுடன் அப்போது தெரிவித்தார்.
மனிஷா கொய்ராலாவின் "ஹீர மண்டி "

கடந்த 1940களில் இந்திய சுதந்திர போராட்டத்தின் பின்னணியில் ஹீரமண்டி என்ற இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. லாகூரில் உள்ள ஹீர மண்டியின் சிவப்பு விளக்கு மாவட்டத்தில் பெண்களின் வாழ்க்கையை இது விவரிக்கிறது.
மனிஷா கொய்ராலா உடன் சோனாக்ஷி சின்கா, ஷர்மின் சேகல், சஞ்சீதா ஷேக், ரிச்சா சதா, தாஹா ஷா மற்றும் அதிதி ராவ் கைதாரி ஆகியோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இதையும் படிங்க: செல்வராகவன் கொடுத்த புத்தாண்டு பரிசு.. 7ஜி ரெயின்போ காலனி-2