தமிழகத்தில் அதிமுக எதிர்க்கட்சியாக இருக்கும் நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் ஆயத்த பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. பூத் கமிட்டி நிர்வாகிகள் உடனான ஆலோசனை, திண்ணைப் பிரச்சாரம், முக்கிய நிர்வாகிகள் உடனான ஆலோசனை என தேர்தல் பணிகளை அதிமுக தொடங்கியுள்ளது.

இதற்கிடையில் செங்கோட்டையனுக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. ஒரே இடத்திற்கு செல்லும் போது கூட இருவரும் சந்தித்துக் கொள்ளாமல் இருப்பது, சட்டசபையில் செங்கோட்டையன் தனியாக இருப்பது உள்ளிட்ட நிகழ்வுகளும் அரங்கேறின.
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து வந்த நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை செங்கோட்டையன் சந்தித்ததோடு அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்தாகவும் தகவல் வெளியாகியது. அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கான போட்டியாக இது இருக்குமா என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் எழுந்தது.
இதையும் படிங்க: நீங்களாம் சுயநலவாதி, கொத்தடிமை..! எஜமான விசுவாசம் தடுக்குதோ..? ஃபுல் ஃபார்மில் இபிஎஸ்..!

2 நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தார். அப்போது அதிமுக - பாஜக கூட்டணி உறுதியானது. 2026 ஆம் ஆண்டு தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. அப்போது, எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திப்போம், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், அதிமுகவின் காரைக்கால் தெற்கு தொகுதி முன்னாள் எம்.எல். ஏ. அசனா கட்சியிலிருந்து விலகினார். பாஜக உடனான கூட்டணியில் உடன்பாடு இல்லாததால் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் .
இதையும் படிங்க: 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை... மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது..!