தென்காசி மாவட்டத்தில் இருந்து கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுவதை கண்டித்து அதிமுக சார்பில் வருகிற 6ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதுகாப்பதோடு, தமிழ் நாட்டில் உள்ள கனிம வளங்கள் சுரண்டி எடுத்துச் செல்லும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், இதற்கு விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு உறுதுணையாக இருந்து, தமிழ் நாட்டு மக்களுக்கு மாபெரும் துரோகத்தை இழைத்து வருவதாகவும், அப்பகுதி மக்கள் தங்களது ஆதங்கத்தைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர் என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் பாஜக ஆதரவுடன் ஜெயலலிதா ஆட்சி... 2026 தேர்தலுக்கு டிடிவி தினகரன் புது ட்ராக்..!

அதுமட்டுமல்லாமல், கனிம வளங்களுடன் தினமும் கேரளாவை நோக்கி படையெடுக்கும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களால், அப்பகுதி முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருவது தொடர்கதையாக இருந்து வருகின்றது என தெரிவித்துள்ளார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலமாகவும் இதுகுறித்து, அரசினுடைய கவனத்தை ஈர்க்கும் விதமாக தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில் விவாதிக்க வேண்டும் என பலமுறை கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு கடிதம் அளித்தும், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகளுக்கு, புகார்கள் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியின் இத்தகைய மக்கள் விரோதச் செயலுக்கு, தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாகவும், கனிமவள கொள்ளையை கண்டித்து தென்காசியில் வரும் 6ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

6.3.2025 வியாழக்கிழமை காலை 10 மணியளவில், செங்கோட்டை அம்மா உணவகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. K.T. ராஜேந்திரபாலாஜி அவர்கள் தலைமையிலும்; தென்காசி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. C. கிருஷ்ணமுரளி, M.L.A., அவர்கள் முன்னிலையிலும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், தென்காசி வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்; மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள், முன்னாள் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். நிர்வாகத் திறனற்ற விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொள்ளுமாறும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அதிமுகவில் கேள்விக்குறியாகும் எடப்பாடி தலைமை?... கொங்கு மண்டலத்தையே திரும்பி பார்க்க வைத்த அண்ணாமலை...!