தமிழகத்தின் உச்ச நடிகர்களில் ஒருவரான ஏகே என்னும் அஜித் குமார் தற்போது பத்மபூஷன் அஜித்குமார் ஆக மாறி உள்ளார். இந்திய அரசாங்கத்தின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. இதில் தமிழகத்தின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான அஜித் குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற அஜித் குமாருக்கு இந்த விருது இரட்டிப்பு மகிழ்ச்சியை தருவதாக உள்ளது.

பத்மபூஷன் விருது அறிவித்த உடனேயே உலகம் எங்கும் உள்ள அஜித்குமார் ரசிகர்கள் துள்ளி குதித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பத்ம விருதுகள் தொடர்பாக அஜித்குமாரும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பத்ம விருது பெறுவதில் மகிழ்ச்சி. மதிப்பு மிக்க இந்த கௌரவத்திற்காக ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் மோடிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த அங்கீகாரம் தனிப்பட்ட பாராட்டு மட்டுமல்ல, பலரின் கூட்டு முயற்சிக்கு சான்றாகும். இந்த நல்ல விஷயங்களை காண என் தந்தை வாழ்ந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். திரைத்துறையினர் ரசிகர்கள் நண்பர்கள் இப்படித்தான் வாழ வேண்டும் என எனக்கு ஊக்கம் கொடுக்கும் எனது பெருமைமிகு ஷாலினி குழந்தைகள் அனுஷ்கா மற்றும் ஆத்விக்கு எனது நன்றி என அஜித் குமார் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: துபாய் கார் ரேஸில் கலந்து கொள்ளப் போவதில்லை - அஜீத் திடீர் அறிவிப்பு....

குறிப்பாக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளதால் மோடி ஆதரவாளர்கள் மற்றும் பாஜகவினர் மகிழ்ச்சியில் திளைக்கத் தொடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: நடிகர் அஜித்குமார், கிரிக்கெட்டர் அஸ்வினுக்கு பத்ம விருது.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு.!