தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் என உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பொங்கலை முன்னிட்டு அவனியாபுரத்திலும், மாட்டுப்பொங்கலை முன்னிட்டு பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு:
இன்று காணும் பொங்கலை முன்னிட்டு மதுரை அலங்காநல்லூரில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு நடைபெற்றது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர் மூர்த்தி உள்ளிட்ட அமைச்சர்களும் பங்கேற்றனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 1,000 காளைகள் பாரம்பரியமிக்க வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிட விழா குழுவும் , மாவட்ட நிர்வாகமும் முடிவு செய்யப்பட்டது. 500 மாடுபிடி வீரர்களும் களம் கண்டனர். முன்னதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

இதையும் படிங்க: 'குட்டி' வாரிசு இன்பநிதிக்கு ராஜ மரியாதை... ஜல்லிக்கட்டுக்காக போராடி தீர்ப்பில் வெற்றி பெற்றுத் தந்தவருக்கு அவமரியாதையா..?
ஜல்லிக்கட்டு போட்டியில் காயமடையும் காளைகளுக்கு, மாடு பிடி வீரர்களுக்கும் சிகிச்சை அளிக்க 200 மருத்துவர்கள், 60 கால்நடை மருத்துவர்கள், செவிலியர்கள் தயார் நிலையில் இருந்தனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மதுரை காவல் ஆணையர் தலைமையில் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சுற்றுகள், காளைகள், காயமடைந்தவர்கள் விவரம்:
தொடர்ந்து அலங்காநல்லூர் கோவில் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டன. முதல் சுற்றில் 110 காளைகளும், 2வது சுற்றில் 211 காளைகளும், 3 வது சுற்றில் 92 காளைகளும், 4வது சுற்றில் 92 காளைகள் என 8வது சுற்றின் முடிவில் மொத்தம் 811 காளைகள் களம் கண்டன.

இந்த போட்டியில் மாடுப்பிடி வீரர்கள் 19 பேர், காளை உரிமையாளர்கள் 17 பேர், பார்வையாளர்கள் 31 பேர் என மொத்தம் 67 பேர் காயமடைந்தனர்.
அறிவிக்கப்பட்ட பரிசுகள் என்ன?
உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளையாக தேர்தெடுக்கப்படும் காளைக்கும் முதல்வர் சார்பில் டிராக்டரும், சிறந்த வீரராக தேர்தெடுக்கப்படும் மாடுபிடி வீரருக்கு துணை முதல்வர் சார்பில் கார் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தங்கக்காசு,வெள்ளிக்காசு, கட்டில், பீரோ, மெத்தை, அண்டா, பித்தளை பொருட்கள் என மேலும் பல பரிசு பொருட்கள் வீரர்கள் மற்றும் காளைகளுக்கு வழங்கப்பட்டன.
பரிசுகளைத் தட்டிச் சென்றது யார்?
9 சுற்றுகள் நடந்த இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தமாக 20 காளைகளை அடக்கி அபி சித்தர் முதலிடத்தை பிடித்து காரை பரிசாக வென்றார். அவருக்கு அடுத்ததாக இரண்டாவது பரிசு பொதும்பு சேர்ந்த ஸ்ரீதர் என்பவருக்கு ஆட்டோ வழங்கப்பட்டது. இவர் 13-காளைகளை அடக்கினார்.

மேலும், ஏற்கனவே, கடந்த ஆண்டும் சிவகங்கை மாவட்டம் பூவந்தியைச் சேர்ந்த இந்த அபி சித்தர், 10 காளைகளை அசத்தலாக அடக்கி பிடித்து மஹிந்திரா தார் கார் பரிசாக வென்றார். கடந்த ஆண்டை போல இந்த ஆண்டு காளைகளை பிடித்து முதலிடம் பிடித்துள்ளார்.
இதையும் படிங்க: குட்டி தளபதியின் பேண்டில் தூசி தட்டிய அமைச்சர்… இன்பநிதியின் நண்பர்களுக்காக உதயநிதி முன் அசிங்கப்பட்ட பெண் கலெக்டர்..?