பாஜகவில் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் மத்திய, மாநில அரசுகளில் அமைச்சர் பதவியில் இருப்பது கூடாது ஒரு விதியாக உள்ளது. அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி வரும் செப்டம்பர் 17ஆம் தேதி 76ஆவது வயதில் அடியெடுத்து வைக்க உள்ளார். எனவே, நரேந்திர மோடி விரைவில் பிரதமர் பதவியிலிருந்து விலகுவார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. சிவசேனாவின் (உத்தவ் பிரிவு) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் இந்தக் கருத்தை தெரிவித்தார்.

இந்நிலையில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நரேந்திர மோடி பதவி விலக உள்ளரா, நீங்கள் (யோகி) பிரதமராக பதவியேற்பீர்களா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு யோகி ஆதித்யநாத் பதில் கூறுகையில், “இப்போது நான் உத்தரப் பிரதேச முதல்வராக உள்ளேன். மாநில மக்களின் நலன் கருதி பாஜக எனக்கு இந்தப் பொறுப்பை வழங்கியது. அரசியல் என்பது எனக்கு முழுநேரப் பணி அல்ல. இப்போது முதல்வராக நான் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.
இதையும் படிங்க: ஆர்.எஸ்.எஸின் எடுபிடிகள்.. பிரதமர் மோடி மீதும் பாஜக அரசு மீதும் சிபிஐ ஆவேச தாக்கு!!

ஆனால், உண்மையில் நான் ஒரு துறவி. அரசியல் என்பது என்னுடைய நிரந்தர பணி அல்ல. நான் பொதுமக்களில் ஒருவனாக அரசியலமைப்பு பொறுப்புகளை நிறைவேற்றுகிறேன். நான் என்னை என்றும் விசேஷமானவனாகவும் கருதியதில்லை.
என்னைப் பொறுத்தவரை நாடுதான் எல்லாவற்றுக்கும் மேலானது. நாடு பாதுகாப்பாக இருந்தால் தர்மமும் பாதுகாப்பாக இருக்கும். தர்மம் பாதுகாப்பாக இருந்தால் அது மக்கள் நலனுக்கு வழிவகுக்கும்” என்று யோகி தெரிவித்தார்.
இதையும் படிங்க: DMK கூட்டணி தான் எப்பவுமே டாப்.. அடித்து சொல்லும் திருமா..!