மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இரு அவைகளிலும் அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக திமுக, அதன் கூட்டணி கட்சி எம்.பிக்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் கருப்பு உடை அணிந்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மன்னிப்பு கேள், நாவை அடக்கு, ஆணவப் பேச்சை நிறுத்து, தமிழ் எங்கள் உயிர், தீயை தீண்டாதே தமிழரை சீண்டாதே போன்ற பதாகைகள் உடன் கோஷங்கள் எழுப்பினர்.

நாடாளுமன்ற வளாகத்தில் பேசிய திரிணமூல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி, “தர்மேந்திர பிரதான் தனது கருத்துக்களுக்கான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும். அவர் பயன்படுத்திய மொழி எதிர்பாராதது. இதுபோன்ற மொழியைப் பயன்படுத்தியதன் மூலம் ஒரு மத்திய அமைச்சர், மாநில மக்களை அவமதித்துள்ளார். ஒன்று அவர் அவையில் மன்னிப்பு கேட்க வேண்டும், அல்லது அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும். பிரதமர் மோடி தனது அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கேட்க வேண்டும். திரிணமூல் காங்கிரஸ், திமுகவுக்கும் தமிழக மக்களுக்கும் ஆதரவாக நிற்கிறது.” என்று கூறினார்.
இதையும் படிங்க: காந்தி, நேருவையே ஓடவிட்டோம்... தமிழ் நாட்டில் மோடி- அமித்ஷாவை விட்டுவிடுவோமா..? -ஆ.ராசா சவால்..!

திரிணாமுல் காங்கிரஸ் திமுக எம்.பி.,களுக்கு ஆதரவை தெரிவித்த உரிமையிலோ, அல்லது எதிர்கட்சி என்கிற நட்பினாலோ திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி-களும் திமுக எம்.பி.,களும் நெருக்கமாக பழக ஆரம்பித்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. அதற்கு உதராரணமாக திமுக எம்.பி ஆ.ராசாவில் இந்தச் செயலை எடுத்துக் கூறுகிறார்கள். நாடாளுமன்றத்தை விட்டு ஆ.ராசா வெளியேற முற்படும்போது, எதிரில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்.பி., சாயானி கோஷ் அவர்களைக் கடந்து உள்ளே செல்ல நடந்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென திரும்பிய ஆ.ராசா, பெண் எம்.பி., சாயானி கோஷ் முதுகில் கைவைத்து கூப்பிட்டு உரிமையாகப் பேசினார். இந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி உள்ளது.
யார் இந்த அழகான பெண் எம்.பி சாயானி கோஷ்?
ஜாதவ்பூர் மக்களவை தொகுதியின் எம்.பியாக இருப்பவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைத் தேர்ந்த சாயானி கோஷ். பெங்காலி திரைப்பட, தொலைக்காட்சி நடிகை. கனமாச்சி , அந்தரால் , ஏக்லா சோலோ , அ மர் சாஹோர் , பிட்னூன் , மேயர் பியே , ராஜ்கஹினி உள்ளிட்ட பெங்காலி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். 2021 -ல் அரசியலில் களமிறங்கினார். பிப்ரவரி 24, 2021-ல் திரிணாமுல் காங்கிரஸில் சேர்ந்தார்.

கட்சியில் சேர்ந்த அடுத்த மாதமே அதாவது, மார்ச் 2021-ல், மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் அசன்சோல் தெற்குத் தொகுதிக்கான திரிணாமுல் காங்கிரஸின் வேட்பாளராக சாயானி கோஷ் அறிவிக்கப்பட்டார் . ஆனால், அவர் பாஜக வேட்பாளர் அக்னிமித்ரா பாலால் தோற்கடிக்கப்பட்டார். 
அபிஷேக் பானர்ஜி அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, ஜூன் 2021 இல் அவர் "திரிணாமுல் காங்கிரஸின் இளைஞர் பிரிவின் தலைவராக" நியமிக்கப்பட்டார். 2022 மேற்கு வங்க பள்ளி சேவை ஆணைய ஆட்சேர்ப்பு ஊழல் தொடர்பான விசாரணை தொடர்பாக, அமலாக்க இயக்குநரகம் ஜூன் 30, 2023 சாயானி கோஷிடம் 11 மணி நேரம் விசாரணை நடத்தியது . 2024 மக்களவைத் தேர்தலில் , சாயானி கோஷ் திரிணாமுல் வேட்பாளராக ஜாதவ்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு 2.5 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதையும் படிங்க: 'புத்தர் சிலையை விற்றுதான் ஸ்ரீரங்கம் கோயிலை கட்டினார்கள்...' பரபர சர்ச்சையைக் கிளப்பிய ஆ.ராசா..!