அர்ஜென்டினா நாட்டின் துறைமுக நகரமான பஹியா பிளாங்காவில் கனமழை வெளுத்து வாங்கியது. வானம் பொத்துக்கிட்டு ஊற்றுகிறதோ என்று நினைக்கும் அளவிற்கு பேய் மழை அந்த நகரத்தை தலைகீழாக புரட்டிப் போட்டது.

ஒரு ஆண்டு முழுமைக்கும் எந்த அளவுக்கு மழை பெய்ய வேண்டுமோ அந்த மழை அன்று எட்டே மணி நேரத்தில் கொட்டி தீர்த்து விட்டது. இந்த பேய்மழைக்கு 13 பேர் பலியாகி விட்டனர். மேலும் அந்த நகரமே அழிந்து விடும் என அந்த நாட்டின் அமைச்சர் ஒருவரே சொல்லும் அளவுக்கு மிக மோசமான நிலைமை ஏற்பட்டதாக தகவல்கள் வந்தன.
இதையும் படிங்க: வேலூரில் களைகட்டிய மயான கொள்ளை விழா.. நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!
வெள்ளம் இழுத்துச் சென்ற 13 பேர்களில் இரண்டு பேர் இளம் பெண்கள். மற்றும் நான்கு, ஒரு வயதுடைய குழந்தைகள் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அங்குள்ள மருத்துவமனை அறைகள் நீரால் மூழ்கடிக்கப்பட்டு சுற்றுப்புறங்களை தீவுகளாக மாற்றி விட்டன.

நகரத்தின் பெரும்பான்மை பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தலைநகர் பியூனர்ஸ் அயர்ஸில் இருந்து 600 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மூன்றரை லட்சம் மக்கள் வசிக்கும் நகரம் இது. காணாமல் போன சிறுமிகள் தண்ணீரால் இழுத்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என்று வானொலி தகவல்கள் தெரிவித்தன.
வெள்ளம் சூழ்ந்த சாலைகளில் மட்டும் குறைந்தது ஐந்து பேர் இறந்தனர். வேகமாக உயர்ந்து வந்த நீரில் அவர்களுடைய கார்கள் சிக்கி இருக்கலாம். புயல் காரணமாக ஜோஸ் பெண்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர். செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவ ஊழியர்கள் குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்து செல்வதை காட்டும் காட்சிகள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.

பின்னர் அவர்களுக்கு ராணுவமும் உதவி செய்தது. உள்ளூர் ஊடகங்கள், வெள்ளத்தில் மூழ்கிய கடைகளின் படங்களை காட்டி அவை இரவு முழுவதும் சூறையாடப்பட்டதாக தெரிவித்தன. அரசாங்க தரப்பில் அவசரகால மறு சீரமைப்பு உதவியாக 9.2 மில்லியன் டாலரை அங்கீகரித்துள்ளது.
மேலும் சுழன்று அடித்த புயல், சுற்றியுள்ள கடலோர பகுதியின் பெரும் பகுதியில் மின்சாரம் இல்லாமல் செய்து விட்டது. சில இடங்களில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் தெருக்களில் தேங்கி இருந்ததால் அதிகாரிகள் மின்சாரத்தை நிறுத்தி விட்டனர்.

மேலும் மேயர் அலுவலகம் கொடுத்துள்ள தகவலின் படி சனிக்கிழமை அன்று மட்டும் வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக இருந்தது. இது உச்சத்தில் இருந்த 1321 விட குறைவாகும்.
இந்த நகரம் கடந்த காலங்களிலும் வானிலை தொடர்பான பேரழிவுகளை சந்தித்துள்ளது. இதில் 2023 ஆம் ஆண்டு ஏற்பட்ட புயல் 13 உயிர்களை பலக கொண்டது. வீடுகள் இடிந்து விழுந்தன; மற்றும் பரவலான உள்கட்டமைப்பு சேதம் ஏற்பட்டது. இரவில் ரிசார்ட் நகரமான மாடல் பிளாட்டாவிலும் பலத்த மழை பெய்தது. அதிகாரிகள் மக்களை வீட்டுக்குள்ளேயேஇருக்கும்படி வலியுறுத்தினார்கள்.
இதையும் படிங்க: நிஜத்தில் நடக்கும் ஜெய்பீம் சம்பவம்.. விசாரணைக்காக அழைத்து சென்றவர் எங்கே? கணவரை கண்ணில் காட்டக்கூறி பெண் கண்ணீர்..!