உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி 11 சுற்றுகளுடன் நிறைவடைந்தது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரையில் உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இன்று காலை 6.30 மணிக்கு வணிக வரித்துறை மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளை தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் இதில் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, பூமிநாதன் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மதுரை மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் தலைமையில் நான்கு துணை ஆணையாளர்கள் பத்து உதவி ஆணையாளர்கள் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதையும் படிங்க: அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அடுத்த அதிரடி; இறுதிச்சுற்றில் ஆட்சியர் போட்ட திடீர் உத்தரவு!
போட்டியில் பங்கேற்கும் முன்பே, 21 கால்நடைத்துறை மருத்துவர்களைக் கொண்ட குழு காளை பரிசோதனை செய்தது. அதேபோல் மதுரை மாநகராட்சி தலைமை மருத்துவ அதிகாரி இந்திரா தலைமையில் 75 மருத்துவ பணியாளர்கள் மாடுபிடி வீரர்கள் தகுதியை பரிசோதனை செய்தனர். இதில் போலி டோக்கன் காரணமாக 21 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. அதேபோல் 29 மாடுபிடி வீரர்கள் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
மாடுபிடி வீரர்கள் ஒரு சுற்றுக்கு50 பேர் என பேர் களமிறங்கினர். மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்த பின்னர் வரிசையாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்று என 11 சுற்றுகள் நடத்தப்பட்டதில் 900க்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டன. 900க்கும் அதிகமான மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர்.
மாடுபிடி வீரர் பலி:
இந்த ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் 41 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டின் போது மாடுபிடி வீரர்கள் 18 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 17 பேர் மற்றும் பார்வையாளர்கள் 6 பேர் காயமடைந்தனர். இதில் 9 பேர் மேல் சிகிச்சைக்காக படுகாயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, மாடு மார்பில் குத்தியதில் மதுரை விளாங்குடியைச் சேர்ந்த மாடுபிடி வீரரான நவீன்குமார் என்பவர் படுகாயம் அடைந்தார். அவனியாபுரத்தில் முதலுதவி செய்யப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காயம் அடைந்தவர்களுக்கு அருகில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் சிகிச்சை அளித்தனர் மேலும் எலும்பு முறிவு கண்டறிய அறிய நடமாடும் எக்ஸ்ரே வாகனம் அங்கு தயார் நிலையில் நிறுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் டிராக்டரும், துணை முதல்வர் சார்பில் காரும் பரிசாக அளிக்கப்பட இருக்கிறது. காலை 6 மணி முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 41 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டின் போது மாடுபிடி வீரர்கள் 18 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 17 பேர் மற்றும் பார்வையாளர்கள் 6 பேர் காயமடைந்தனர். இதில் 9 பேர் மேல் சிகிச்சைக்காக படுகாயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, மாடு மார்பில் குத்தியதில் மதுரை விளாங்குடியைச் சேர்ந்த மாடுபிடி வீரரான நவீன்குமார் என்பவர் படுகாயம் அடைந்தார். அவனியாபுரத்தில் முதலுதவி செய்யப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஜல்லிக்கட்டில் ஏற்பட்ட சலசலப்பு:
10வது சுற்று போட்டியின் போது காளை உரிமையாளருக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் இடையே களத்திலேயே மோதல் வெடித்தது. மாடுபிடி வீரரை மாட்டின் உரிமையாளர் அடித்ததால் பரபரப்பு நிலவியது. இதனால் இருவருக்குமே பரிசு கிடையாது என அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இறுதிச்சுற்று ஜல்லிக்கட்டு நடந்து கொண்டிருந்த போது, வாடிவாசலில் இருந்து தனது காளை வெளியே வரும் வேளை பார்த்து அதன் உரிமையாளர் மாடுபிடி வீரர்கள் மீது திருநீற்றை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மாடு வருவது தெரியாமல் வீரர்கள் பெரும் அசம்பாவிதத்தில் சிக்கியிருக்கக்கூடும் என்பதால், திருநீறு வீசிய நபரை உடனடியாக கைது செய்யுங்கள் என காவல்துறைக்கு அங்கிருந்த மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.
முதல் மூன்று இடங்களைப் பிடித்தது யார்?
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 19 காளைகளை அடக்கிய திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கார்த்தி என்பவர் முதலிடம் பிடித்தார். 15 காளைகளை அடக்கிய குன்னத்தூரைச் சேர்ந்த அரவிந்த் திவாகர் 2வது இடமும், 14 காளைகளை அடக்கிய திருப்புவனம் முரளிதரன் 3வது இடமும் பிடித்தனர். இதில் 19 காளைகளை அடக்கிய திருப்பரங்குன்றம் கார்த்தி சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டு அவருக்கு கார் பரிசு வழங்கப்பட்டது. 2வது இடம் பிடித்த அரவிந்த் திவாகருக்கு பைக்கும் வழங்கப்பட்டது.

ஜல்லிக்கட்டில் வி.கே.சசிகலா என்ற பெயரில் அவிழ்த்துவிடப்பட்ட காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு டிராக்டர் பரிசு வழங்கப்பட்டது. சிறந்த காளைக்கான 2வது பரிசு ஜி.ஆர்.கார்த்திக் என்பவரது காளைக்கு கிடைத்தது. அந்த காளையின் உரிமையாளருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது.
காளை, காளையர்கள் வாங்கிய பரிசுகள்:

முதல் பரிசாக மாடுபிடி வீரருக்கு துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் சார்பில் காரும், 2, 3-ம் பரிசாக பைக் மற்றும் கன்றுடன் கூடி பசு வழங்கப்பட்டது. சிறந்த காளைக் கான முதல் பரிசாக முதல்வர் மு.க ஸ்டாலின் சார்பில் டிராக்டர், மேயர் சார்பில் கன்றுடன் கூடிய பசுமாடு வழங்கப்பட்டது. மேலும் ஜல்லிக்கட்டில் பங்கேற்று வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு ரொக்கம், தங்க காசு, பேன், கட்டில், பீரோ, அண்டா உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: காளை முட்டியதில் மாடுபிடி வீரர் மரணம்; 9 பேரின் நிலை என்ன?