காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட கீரை மண்டபம் அருகே ஆலடி பிள்ளையார் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ் குமார்.
இவரின் மனைவி காமாட்சி, தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
வழக்கமாக ஸ்கூட்டியில் வேலைக்கு சென்று திரும்பும் காமாட்சி, மாலை வீட்டின் வாசலில் ஸ்கூட்டியை நிறுத்தி வைப்பது வழக்கம்.
இதையும் படிங்க: தமிழக சிறுவர்களிடையே தலைக்கவசம் அணியும் பழக்கம் குறைவு: 11 மாவட்டங்கள் குறித்து அறிக்கை வெளியீடு...
இன்று காலையில் பணிக்கு செல்வதற்காக கிளம்பிய காமாட்சி, வெளியே வந்து பார்த்த போது ஸ்கூட்டி திருடு போனது தெரிந்தது.
இதுகுறித்து விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.


போலீசார் அவரின் வீட்டின் அருகே இருந்த கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தனர்.
அதில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர், வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஸ்கூட்டியை ஒரே நிமிடத்தில் லாவகமாக திருடி சென்றது தெரிந்தது.
இதன் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகரில் நாளுக்கு நாள் இரவு நேரங்களில் பைக் திருட்டு அதிகரித்து வரும் நிலையில்,
போலீசார் ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: குளிர்பானத்தில் மயக்க மருந்து..! ஆடைகளைக் கழற்றி வீடியோ..! இளம் பெண்ணை நாசமாக்கிய வேலூர் சம்பவம்