xகோவையில் பாஜக மாவட்ட அலுவலகத்தை திறந்து வைக்க வந்த அமித் ஷாவிற்கு அசத்தலான நினைவு பரிசு வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு நிகழ்ச்களில் கலந்து கொள்ள நேற்று இரவு கோவை வந்த அமித்ஷா நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கினார். இன்று காலை பீளமேடு பகுதியில் அமைந்துள்ள கோவை மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, தொடர்ந்து கானொலி காட்சி மூலம் திருவண்ணாமலை, ராமநாதபுரம் மாவட்ட அலுவலகங்களை திறந்து வைத்தார்.

தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டில் மக்களவை தொகுதிகள் குறைக்கப்படாது என்றும், தென்னிந்திய மக்களுக்கு கூடுதல் தொகுதி தான் கிடைக்கும், தொகுதி குறைய வாய்ப்பு இல்லை என்றும் உறுதியளித்தார். தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடி நிதி வழங்கவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் பொய்யான தகவலை கூறி வருகிறார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் ஒரு தொகுதி கூட குறையாது... முதல்வர் மு.க.ஸ்டாலின் முகத்தில் கரியைப் பூசிய அமித் ஷா...!
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வெறும் 1.52 லட்சம் கோடி தான் வழங்கப்பட்டது. தமிழ் மக்கள் வளர்ச்சி, பண்பாட்டிற்கு உழைக்கும் பிரதமர் மோடியின் திட்டங்களை மக்களிடம் சேர்க்க வேண்டும் எனக்கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு 133 திருக்குறள் அதிகாரங்கள் பதிவு செய்யப்பட்ட தமிழ் சால்வையை நிர்வாகிகள் அணிவித்தனர். அதில் “பாரத அன்னை வெல்க ... தமிழ் அன்னை வாழ்க ...” என்ற வாசகங்கள் கொண்ட அங்க வஸ்திரம் அணிவித்தார்கள். மத்தியில் மற்றும் அங்க வஸ்த்திரத்தின் இரண்டு முனைகளிலும் திருவள்ளுவர் படம் இடம் பெற்றுள்ளது.
மேலும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அமித் ஷாவிற்கு தமிழர்கள் கொண்டாடும் வகையிலான அசத்தல் நினைவு பரிசையும் கோவை பாஜகவினர் வழங்கியுள்ளனர். அமித் ஷாவின் உடைய உருவப்படத்தை 247 தமிழ் எழுத்துக்களைக் கொண்டு உருவாக்கியுள்ளனர். அதில் கி.மு மூன்றாம் நூற்றாண்டு தமிழ் எழுத்துக்களின் உடைய வடிவங்களும் இடம்பெற்றிருக்கின்றன .

வாய்மை செங்கோன்மை மற்றும் புகழ் என்ற அதிகாரங்களில் இருந்து குறள்களும், இந்த ஆட்சியின் உடைய நேர்மை திறமை மற்றும் மக்கள் நலன் பற்றிய வள்ளுவரின் மேற்கோள்கள் கொண்ட குறள் களும் எழுதப்பட்டிருக்கிறது.
தமிழ் வாழ்க என சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் செய்துவிட்டு அதை மறந்துவிடும் திராவிட கட்சிகள் போல் இல்லாமல், என்றென்றும் தமிழை நினைவு கொள்ளும் வகையிலான அசத்தலான பரிசுகளை அமித் ஷாவிற்கு வழங்கி பாஜகவினர் அசத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: அமித் ஷா போட்ட பதிவுல இதை கவனிச்சீங்களா?.... துள்ளாட்டம் போடும் அண்ணாமலை ஆதரவாளர்கள்...!