தமிழகத்தில் திமுக ஆட்சியில் மதுபான கடையில் ரூ 1000 கோடி ஊழல் நடைபெற்று இருப்பதை கண்டித்து இன்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கருப்புகொடியுடன் ஆர்பாட்டம் நடை பெற்று வருகிறது.

அதனை முன்னிட்டு இன்று விருதுகர்- சாத்தூர் சாலையில் அமைந்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் வைத்து கிழக்கு மாவட்ட தலைவர் பெண்டகன் ஜி.பாண்டுரங்கன் தலைமையில் கருப்பு சட்டை அணிந்து கையில் கருப்பு கொடியுடன் தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: தமிழக அரசை கண்டித்து ஊர்வலமாக சென்ற பாஜகவினர் கைது..!

மேலும் இந்த நிகழ்வின் போது நகரத் தலைவர் மணிராஜ், வழக்கறிஞர் அணி பிரவு மாவட்ட தலை வர் தனபால், செயலாளர் மாரிமுத்து, ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் செல்வகுமார், சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் பிரான்சிஸ் மற்றும் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ஒவ்வொரு நாளும் 5 கொலைகள்..! சட்டம் - ஒழுங்கு பாதுகாக்கப்படும் லட்சணமா இது? கொதித்தெழுந்த அன்புமணி..!