மும்மொழி கொள்கைக்கு ஒப்புதல் கொடுத்தால்தான் தமிழகத்திற்கு உரிய நிதியை விடுவிக்க முடியும் என மத்திய அரசு கூறிவிட்டது. ஆனால் 2 மொழி கொள்கையே தொடரும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதிப்பட கூறியுள்ளார். மேலும் மும்மொழி கொள்கையை பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்த்து வருகின்றனர்.

இதனிடையே முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று கையெழுத்து இயக்கத்தை நடத்த முற்பட்டார். இந்த நிலையில், சென்னை ஓ.எம்.ஆரில் பாஜகவினர் கையெழுத்து இயக்கத்தை நடத்தினர். அப்போது பள்ளி மாணவர்களை வலுக்கட்டாயமாக அழைத்து கையெழுத்திட வைத்துள்ளனர். வாடா தம்பி வந்து, சைன் போடு... என அழைத்து கையெழுத்திட வைத்து பிஸ்கட் கொடுத்து அனுப்பியுள்ளனர்.
இதையும் படிங்க: நடிகர் சந்தான பாரதியை இரும்பு மனிதர் ஆக்கிய கரும்பு உள்ளம் கொண்ட சங்கிகளுக்கு வாழ்த்துகள்!

பல மாணவர்கள் கையெழுத்திட முன் வராத நிலையில் வலுக்கட்டாயமாக இழுத்து கையெழுத்திட கூறியுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாஜகவின் கையெழுத்து இயக்கத்தை விமர்சித்து பேசினார்.

முதலில் குழந்தைகளிடம் கையெழுத்தே வாங்க கூடாது என தெரிவித்தார். தாங்கள் நீட் தேர்வுக்காக ஒரு கோடி கையெழுத்துகளை வாங்கியதாகவும் அப்போது பள்ளி மாணவர்களை தவிர்த்துதான் கையெழுத்துகள் வாங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
ஏற்கனவே மிஸ்டுகால் கொடுத்து ஒரு கோடி பேரை சேர்த்தார்கள் என்று நக்கல் அடித்த உதயநிதி ஸ்டாலின் அதன் தொடர்ச்சியாக பிஸ்கட் கொடுத்து மாணவர்களிடம் கையெழுத்து வாங்குவதாக விமர்சித்தார்.
இதையும் படிங்க: இதோட நிறுத்திக்கோங்க இல்லைன்னா... பாஜகவை பகிரங்கமாக எச்சரித்த அமைச்சர் அன்பில் மகேஷ்...!