மதுரை அருகே அமைந்துள்ளது கோவில்பாப்பாகுடி கிராமம். இக்கிராமத்தில் இயங்கி வருகிறது மகரிஷி வித்யா மந்திர் பள்ளி. சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் இப்பகுதியில் புகழ்பெற்ற இப்பள்ளிக்கு இன்று இமெயில் மூலமாக பள்ளியில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் மின்னஞ்சல் செய்தி வந்துள்ளது.

அதனை தொடர்ந்து அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகத்தினர் அலங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்த அலங்காநல்லூர் போலீசார் மற்றும் மதுரை வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். மேலும் தகவல் அறிந்ததை தொடர்ந்து பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளி முன்பாக கூடி தங்களது குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: எலான் மஸ்க் அழைக்கிறார்! பள்ளியும், படிப்பும் முக்கியமல்லையாம்! இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு...

அதேபோல் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஏனைய மாணவர்கள் பள்ளி மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் அவரவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து தற்போது பள்ளியில் வெடிகுண்டு உள்ளதா என தீவிர சோதனை நடைபெற்று வருவதால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.
இதையும் படிங்க: சீமானுக்கு செக் வைத்த நீதிமன்றம்... என்ன வேணா பேசலாம்னு நினைச்சீங்களா...