சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் மதமாற்ற வழக்கு ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மனைவி ஒருவர் தனது கணவருக்கு எதிராக புகார் அளித்துள்ளார். மதம் மாறாததற்காக கணவர் தன்னை பெல்ட்டால் அடிப்பதாக மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.
புகார் அளிக்க காவல் நிலையத்திற்குச் சென்ற பெண், ''எங்கள் திருமணம் இந்து முறைப்படி நடந்தது. ஆனால் கணவர் சில நாட்களிலேயே கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டார். அதன் பிறகு அவர் என்னையும் மதம் மாறச் சொல்லி வற்புறுத்துகிறார். இதற்காக, என்னை அடித்து துன்புறுத்துகிறார். அவர் எனது குழந்தைகளையும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறச் சொல்கிறார்.

எனது கணவர் வீட்டிலிருந்த கடவுள் சிலைகளையும், புகைப்படங்களையும் அகற்றிவிட்டார். இப்போது வீட்டில் இயேசு கிறிஸ்துவின் புகைப்படம் மட்டுமே உள்ளது. அவர் சிலை வழிபாட்டை பிசாசு வழிபாடு என்று கூறுகிறார். இது குறித்து தனது மாமியாரிடம் சொன்னபோது அவர்கள் எதுவும் கண்டுகொள்ளவில்லை. இதனை அடுத்து அங்கிருந்து கிளம்பி வந்து என் பெற்றோரின் வீட்டில் வசித்து வருகிறேன். இப்போது அவர் குழந்தைகளை கிறிஸ்தவ மதத்தின்படி பிரார்த்தனை செய்ய கட்டாயப்படுத்துகிறார் அதன் பிறகு நான் காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்தேன்.

இதையும் படிங்க: தூக்கில் தொங்கத் தயார்..! மும்மொழிக் கொள்கைகக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என திமுக நிரூபிக்குமா? திண்டுக்கல் சீனிவாசன் ஆவேசம்
2016 ஆம் ஆண்டு இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டேன். திருமணத்திற்குப் பிறகு என் கணவர் இந்து மதத்தைப் பின்பற்றினார். ஆனால், பின்னர் அவர் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டார். ஆரம்பத்தில், ''நீங்கள் உங்கள் இந்து மதத்தைப் பின்பற்றுங்கள். நான் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுவேன்'' என்று அவர் சொல்லத் தொடங்கினார். சிறிது காலம் எல்லாம் நன்றாக இருந்தது. ஆனால் பின்னர் அவர் என்னை மதம் மாற்றும்படி அழுத்தம் கொடுக்கத் தொடங்கினார்.
இந்தக் காலகட்டத்தில் அவர் என்னைப் பலமுறை அடித்தார். அதன் பிறகு நான் தேவாலயத்திற்குச் சென்று பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தேன். ஆனால் அவர்களின் பிரார்த்தனை முறை எனக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் நான் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டேன்.

தேவாலயத்திற்கு செல்ல மறுத்த பிறகு, எனது கணவர் என்னை மோசமாக நடத்தத் தொடங்கினார். என்னை மதம் மாற்றுவதற்காக அவர் தினமும் பெல்ட்டால் அடிப்பார். நான் என் பெற்றோரின் வீட்டிற்கு வந்த பிறகும், அவரது நடத்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதன் காரணமாக நான் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது'' எனத் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில், பெண்ணின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக சிவில் லைன் டிஐ எஸ்ஆர் சாஹு தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பெண் தனது கணவர் மீது மதம் மாறாததற்காக தாக்குதல் வழக்குப் பதிவு செய்துள்ளார். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு அதன் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பாஜகவா..? ஒன்றிணைப்பா..? செங்கோட்டையனுடன் சேர்ந்து எடப்பாடியாரை சந்தித்த தங்கமணி..!