ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனர் முகேஷ் அம்பானியிடம் ரூ.24,500 கோடி இழப்பீடாக கேட்டு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.மத்திய அரசுக்குச் சொந்தமான ஓஎன்ஜிசி எண்ணெய் பகுதிகளில் இருந்து இயற்கை எரிவாயு எடுத்தது தொடர்பாக, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நீண்ட சட்டப் போராட்டம் நடத்தியது. இந்த சட்டப்போரட்டத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் மத்திய அரசு ரிலையன்ஸ் இன்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கும், அதன் கூட்டு நிறுவனமான பிபி எக்ஸ்ப்ளோரேஷன் மற்றும் நிகோ லிமிடெட் நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பங்குச்சந்தையில் தாக்கல் செய்த பைலிங்கில் “மத்திய அரசுக்கு சொந்தமான கேஜி பேசினில் சட்டவிரோதமாக எண்ணெய் எடுத்து, லாபம் அடைந்ததாக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.24500 கோடி வட்டி, அபராதத்துடன் இழப்பீடு தரக் கோரி கடந்த 3ம் தேதி மத்திய பெட்ரோலியத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதையும் படிங்க: அம்பானியின் பிரம்மாண்ட வன்தாரா.. சிங்கக்குட்டிகளை கொஞ்சி பிரதமர் மோடி உற்சாகம்..!

ஆனால், ரிலையன்ஸ் மற்றும் கூட்டாளி நிறுவனங்கள் இந்த கோரிக்கையை ஏற்கவில்லை, சட்டத்தின் வழியாக இதைச் சந்திப்போம், உயர் நீதிமன்றம் பெரிய அமர்வில் இதை எதிர்கொள்வோம்” எனத் தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்தத் தகவலை பங்குச்சந்தையில் தெரிவித்தபின், காலை வர்த்தகம் தொடங்கியதும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் மதிப்பு சரியத் தொடங்கியது.
பிரச்சனை என்ன?
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அதன் கூட்டு நிறுவனங்களான பிரிட்டிஷ் தெர்மன் நிறுவனங்கள், வங்காள விரிகுடா எண்ணெய் எடுக்கும் பகுதியிலிருந்து கேஜி பேசின் பகுதிக்கு வந்து எண்ணெய் எரியாவை கடந்த 2016ம் ஆண்டு முதல் 7 ஆண்டுகள் எடுத்துள்ளனர். இதற்கான ராயல்டியாக 7.17 கோடி டாலர்களை செலுத்தினாலும், நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக எண்ணெய்எரிவாயு எடுத்துள்ளனர். இதனால், அரசுக்கு 155 கோடிடாலருக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பை வட்டி, அபராதத்துடன் ரிலையன்ஸ், பிபி, நிகோ நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் வழக்குத் தொடர்ந்திருந்தது.
இதையும் படிங்க: சீமானுக்கு மத்திய அரசு 'Y' பிரிவு பாதுகாப்பு..? அமித் ஷாவுக்கு ரிப்போர்ட் கொடுத்த உளவுத்துறை..!