குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை தீவிரமாக அமல்படுத்தியதால் நாட்டில் குறிப்பாக தென் மாநிலங்களில் குழந்தைகள் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்து இருக்கிறது. இதன் காரணமாக வருங்காலத்தில் நாடாளுமன்ற சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் வாய்ப்பு உள்ளது.
அதை தொடர்ந்து குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு புதிய விவாதம் ஒன்றை ஏற்கனவே தொடங்கி இருக்கிறார்.
தற்போது மீண்டும் ஒருமுறை மக்கள் தொகை மேலாண்மை குறித்து விவாதிக்க அவர் அழைப்பு விடுத்தார். சட்டசபையில் இதுகுறித்து அவர் பேசும்போது, அவர் பெண்கள் குறைந்தது இரண்டு குழந்தைகளையாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். கிராமங்கள் மற்றும் தொகுதிகளில் இது குறித்த மனம் திறந்த உரையாடல்களின் அவசியத்தையும் அவர் எடுத்துக் கூறினார்.
இதையும் படிங்க: தொகுதி மறுசீரமைப்பு பற்றி மத்திய அரசு இன்னும் எதுவும் சொல்லவே இல்லை.. ஸ்டாலின் ஆக்ஷனுக்கு சந்திரபாபு ரியாக்ஷன்.!

"ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்கிறார்களா என்பதை உறுதி செய்வதற்காக வருங்காலத்தில் உங்கள் வீடுகளையும் நாங்கள் கண்காணிக்க வேண்டியது இருக்கலாம் "என்று அவர் நகைச்சுவையாக குறிப்பிட்ட போது சட்டசபையில் சிரிப்பலை எழுந்தது.
தொடர்ந்து அவர் பேசுகையில் "ஒவ்வொரு பெண்ணும் குறைந்தது இரண்டு குழந்தைகளைப் பெற வேண்டும். இதைப் பற்றி நாம் பேசத் தொடங்க வேண்டிய நேரம் இது. கிராமங்கள், தொகுதிகள் என அனைத்து இடங்களிலும் விவாதங்களை நாம் மூக்கு வைக்க வேண்டும்"என்றார்.
நாட்டில் மக்கள் தொகை மேலாண்மையின் அவசியம் குறித்து நாயுடு கருத்து தெரிவிப்பது இது முதல் முறை அல்ல. இந்த ஆண்டு ஜனவரியில், இந்தியாவில் பிறப்பு விகிதம் குறைந்து வருவது குறித்து நாயுடு கவலை தெரிவித்தார், மேலும் பிறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்துள்ள தென் கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளின் தவறுகளிலிருந்து குடிமக்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார் .

பல தம்பதிகள் குழந்தைகளைப் பெற தயங்குகிறார்கள், குடும்ப வளர்ச்சியை விட தனிப்பட்ட செல்வத்திற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டிய நாயுடு, "உங்கள் பெற்றோர் அப்படி நினைத்திருந்தால், நீங்கள் இப்போது இந்த உலகத்திற்கு வந்திருப்பீர்களா?" என்று குறிப்பிட்டார். குழந்தை இல்லாமை ஒரு காலத்தில் ஒரு களங்கமாக கருதப்பட்டதை அவர் நினைவு கூர்ந்தார்.
தேர்தலில் போட்டியிட தடை வரலாம்!
இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றிருந்தால் மட்டுமே தனிநபர்கள் சர்பஞ்ச், நகராட்சி கவுன்சிலர் அல்லது மேயராக முடியும் என்றும் நாயுடு கூறியிருந்தார். "இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றவர்கள் மட்டுமே உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட தகுதியுடையவர்களாக மாற்றும் வகையில் சட்டம் கொண்டு வர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது" என்று அவர் கூறியிருந்தார்.
தென் மாநிலத்தில் கருவுறுதல் விகிதம் குறைந்து வருவதாகவும், தேசிய சராசரியான 2.1 ஐ விட மிகக் குறைவாக 1.6 ஆகக் குறைந்து வருவதாகவும் அவர் கூறினார். இந்த சரிவின் தாக்கங்கள் குறித்து அவர் கவலை தெரிவித்தார்.
இந்த போக்கு தொடர்ந்தால், 2047ஆம் ஆண்டுக்குள் ஆந்திரப் பிரதேசம் கடுமையான வயதான பிரச்சனையை எதிர்கொள்ளக்கூடும் என்று எச்சரித்தார். "இது விரும்பத்தக்க எதிர்காலம் அல்ல, நாம் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது" என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: ஒவ்வொரு தொகுதியிலும் 10 ஆயிரம் வீடுகளுக்கு சோலார் பேனல்.. சந்திரபாபு அதிரடி..!