ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், மதுரை ஆகிய மாவட்டங்கள் உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகள், மாவட்டச் செயலாளர்கள் பொறுப்பாளர்களை நியமித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக தலித் சமுதாயத்தை சார்ந்த எம்.எஸ்.கே. ரமேஷ் ராஜை நியமித்து இருக்கிறது. இஸ்லாமிய சமுதாயத்தை சார்ந்த செஞ்சி மஸ்தான் மீண்டும் விழுப்புரம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இளஞரான என் தினேஷ் குமார், திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதிமுகவிலிருந்து வந்த தோப்பு வெங்கடாசலம், ஈரோடு மத்திய மாவட்டத்திற்கும், ஆர். லட்சுமணன், விழுப்புரம் மத்திய மாவட்டத்திற்கும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திமுகவில் இணைய எம்ஜிஆர் விரும்பினாரா? துரைமுருகனின் தவறான பேட்டி: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் விமர்சனம்
ஈரோடு தெற்கு பகுதிக்கு அமைச்சர் சு.முத்துசாமி, ஈரோடு வடக்கு - என்.நல்லசிவம், திருப்பூர் கிழக்கு - க.செல்வராஜ், திருப்பூர் மேற்கு - அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் தெற்கு - இல.பத்மநாபன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் தெற்கு பகுதிக்கு அமைச்சர் பொன்முடியின் மகனும் முன்னாள் எம்பியுமான கௌதம சிகாமணி, மதுரை வடக்கு தொகுதிக்கு அமைச்சர் பி.மூர்த்தியும். மதுரை மாநகருக்கு கோ.தளபதியும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.தஞ்சாவூர் தெற்கு தொகுதிக்கு பழனிவேல் ஆகியோர் சட்டமன்ற பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்
நீலகிரியில் ஏற்கெனவே மாவட்டச் செயலாளராக இருந்த பா.மு.முபாரக் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு அவருக்குப் பதிலாக கே.எம்.ராஜூ அறிவிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மத்திய மாவட்டக் கழக பொறுப்பாளராக இருந்த டி.பி.எம்.மைதீன்கான் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக எம்.எல்.ஏ., மு.அப்துல் வகாப் நியமிக்கப்பட்டுள்ளார். திருவள்ளுர் கிழக்கு மாவட்ட செயலாளராக பணியாற்ரி வந்த டி.ஜெ.எஸ் கோவிந்தராஜன் எம்.எல்.ஏ அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் நியமணம் செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளராக இருந்த அண்ணாதுரை எம்.எல்.ஏ விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக பழனிவேலுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திமுக எம்.பி. கதிர் ஆனந்திடம் கிடுக்கிப்பிடி விசாரணை.. 10 மணி நேரம் அமலாக்கத் துறை அதிகாரிகள் துருவி துருவி கேள்வி