சென்னை காசிமேட்டில் 1000-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளும், 700-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மூலம் மீனவர்கள் நாள்தோறும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. வாரயிறுதி நாட்களின் போது மீனவர்கள் முன்கூட்டியே மீன்பிடிக்கச் சென்றுவிடுவர். அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று கணிசமான விசைப் படகுகளில் மீனவர்கள் கரை திரும்பினர். இந்த நிலையில் பெரிய வகை மீன்கள் வரத்து அதிகமாகக் காணப்பட்டது. இதனால், மீன்களை வாங்க ஏராளமான பொது மக்கள் காசிமேட்டில் குவிந்தனர்.

அதிகாலை 2 மணி முதல் சுற்று வட்டார பகுதியில் உள்ள பொது மக்கள் மற்றும் மீன் பிரியர்கள் மீன் வாங்கத் திரண்டனர். இதனால், காசிமேடு மீன்பிடித் துறைமுகம் பகுதியே களைகட்டியிருந்தது. குறிப்பாக இந்த வாரம் ஏராளமான கடைகளும் திறக்கப்பட்டிருந்ததால், தேவையான மீன்களை நல்ல விலையில் வாங்கி சென்றனர். இந்த நிலையில் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விடுமுறை தினமான இன்று தேவராஜன் என்பவருக்கு சொந்தமான விசை படகில் ஆழ் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களுக்கு ஜாக்பாட் அடித்தது.
இதையும் படிங்க: இரவில் பெண்ணிடம் அத்துமீறல்.. ரயில் நிலையத்தில் நடந்த கொடூரம்.. அச்சத்தில் பயணிக்கும் பெண்கள்..!

மருத்துவ குணம் படைத்த கூரை கத்தாழை மீன் ஏராளமாக அவர்களது வலையில் சிக்கியது. அதன் வயிற்றில் இருந்து எடுக்கப்படும் மெட்டி என்கிற பொருள் மருத்துவ குணம் உள்ளது. இதன் காரணமாக இந்த மீனிற்கு கிராக்கி அதிகம் என கூறப்படுகிறது. இந்த மீன் மிகவும் சுவையாகவும் மருத்துவ குணம் படைத்த மீன் என்பதால் இதனை வியாபாரிகள் அதிகமான விலைக்கு ஏலம் முறையில் எடுப்பார்கள். மக்களும் அதிக விலை கொடுத்து வாங்கி செல்வார்கள். இதனால் இதனை பிடித்து வந்த மீனவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

சென்னை காசிமேடு மீன்பிடி துறை முகத்திலிருந்து காசி மேட்டைச் சேர்ந்த தேவராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப் படகில் சுமார் 10 பேர் பேர் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இந்த நிலையில் மீனவர்கள் வலையில் சுமார் ஒரு டண்ணுக்கும் அதிகமாக கூறல் மீன் சிக்கியது. அதிலும் பெரிய மீன்களாக சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஒரு மீனின் எடை ஏழு கிலோ வரை இருக்கும் எனவும் மீனவர்கள் தெரிவித்தனர். மொத்த மீன்களை ஏலம் முறையில் விற்பனை செய்தால் சுமார் 30லட்சங்கள் வரை விலை போகும் எனவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 15ஆம் தேதி மீன்பிடி தடைக்காலம் அனுசரிக்கப்பட உள்ளது. கடலில் உள்ள மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15 முதல் ஜுன் 14 ஆம் தேதி வரை மீன்பிடித் தடைக்காலம் அரசால் அறிவிக்கப்படும். அதாவது இந்த 61 நாட்கள் மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் ஒரு சில மீனவர்களே ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நிலையில் இன்று மீன் பிரியர்களின் கூட்டம் மீன் வாங்குவதற்காக அதிகமாகவே வந்திருந்தனர்.
இதையும் படிங்க: மீன்பாடி வண்டி தான் டார்கெட்.. மத்த வண்டியை தொட மாட்டேன்.. சென்னையில் நூதன திருடன் கைது..