2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது . மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள 18 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. தொடர்ந்து இன்று மதியம் 3.30 மணிக்கு நடந்த போட்டியில் ராஜஸ்தான் - ஹைதராபாத் அணிகள் களம் கண்டன.

இந்த நிலையில் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய 2வது ஆட்டத்தில் 5 முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கிய இந்த ஆட்டத்தை காண ரசிகர்கள் மைதானத்தில் திரண்டனர். இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையும் படிங்க: மகளிர் பிரீமியர் லீக்! மும்பை அணி அபார வெற்றி...

இதையடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களமிறங்கியது. சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி 140 ரன்கள் கூட எடுக்காது என நினைத்திருந்தனர். ஆனால், தீபக் சாஹர் கடைசி இரண்டு ஓவர்களில் ஆடிய ஆட்டத்தால் அந்த அணி 155 ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் நூர் அகமது நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். கலீல் அகமது மூன்று விக்கெட்டுகளை சாய்த்தார். அஸ்வின் மற்றும் நாதன் எல்லிஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் பதிரானா, சிஎஸ்கே அணியின் முதல் போட்டியில் விளையாடாதது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்தது. இதனையடுத்து, 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய சென்னை அணி, இலக்கை சுலபமாக எட்டியது. மும்பை அணியை 4 விக்கெட்டுகள், 5 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் வீழ்த்தி சென்னை அணி அசத்தல் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: திருநெல்வேலி அருகே பெண் தற்கொலை.. போலீசார் விசாரணை..