அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அனைவரும் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்த நிகழ்வில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், ஆ.ராசா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: தலையாட்டி பொம்மை யோக்கியதை.. முதல்வர் சொன்னா கோபம் வருதோ.? இபிஎஸ்-ஐ கதறவிடும் அமைச்சர் ரகுபதி!
இதையும் படிங்க: பீதியின் உச்சத்தில் முதல்வர் ஸ்டாலின்.. ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது.. டார்.. டாராக கிழித்த எடப்பாடி..!