தனியார் ஹஜ் கோட்டா திடீரென ரத்து செய்யப்பட்டது குறித்து பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், ஹஜ் யாத்திரைக்கு ஆர்வத்துடன் தயாராகி வரும் ஆயிரக்கணக்கான இந்திய இஸ்லாமிய யாத்ரீகர்களிடையே ஹஜ் ஒதுக்கீட்டு ரத்து மன உளைச்சலை ஏற்படுத்தும் என கூறியுள்ளார்.

எனவே, சவுதி அரேபியாவின் அதிகாரிகளை அவசரமாகத் தொடர்பு கொண்டு, விரைவான தீர்வைப் பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

பணம் செலுத்திவிட்டு ஹஜ் பயணிகள் கவலையில் உள்ளதால், இந்த சூழ்நிலையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, இந்த விவகாரம் குறித்து சவுதி அரேபியாவில் உள்ள அதிகாரிகளிடம் எடுத்துச் சென்று, விரைவான தீர்வைப் பெறுமாறு வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: தமிழக அரசின் தொடர் வலியுறுத்தல் எதிரொலி.. 10 ஆயிரம் இந்திய இஸ்லாமியர்களுக்கு ஹஜ் விசா..!
இதையும் படிங்க: 2026 தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காது.. டெல்லி எஜமானர்களிடம் சொல்லிடுங்க.. நயினாரை நயப்புடைத்த ஆர்.எஸ். பாரதி!!