திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான சர்.பிட்டி தியாகராயர் 1920 இல் மாண்டேகு செம்ஸ்போர்ட் சீர்திருத்தத்தின் படி நடைபெற்ற நேரடி தேர்தலில் வெற்றி பெற்ற முதல் மேயர் என்கிற பெருமையை பெற்றவர். தான் ஒரு செல்வந்தராக இருந்தாலும் எளிய மக்களுக்காக உழைக்க வேண்டும் என அரசியல் களம் புகுந்தவர். வெள்ளுடை வேந்தர் என்று அழைக்கப்படும் சர். பிட்டி தியாகராயிரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

பிட்டி தியாகராயரின் பிறந்தநாளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவருக்கு புகழாரம் சூட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கல்விக்கூடங்கள், தெருவிளக்குகள், குடிநீர் இணைப்பு, மதிய உணவுத் திட்டம் எனச் சென்னை மாநகரின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவர் என கூறியுள்ளார். நீதிக்கட்சியின் நிறுவனர்களுள் ஒருவராக இருந்து, தன்னைத் தேடி வந்த முதலமைச்சர் பொறுப்பை மறுத்த மாண்பாளராக உயர்ந்தவர் என்றும் எவருக்காகவும் தன் இயல்பை மாற்றிக்கொள்ளாத வெள்ளுடை வேந்தர் எனப் பெயர் பெற்றவர் என்றும் புகழாரம் சூட்டினார்.
இதையும் படிங்க: முன்ளாள் எம்.எல்.ஏ-க்களுக்கு பென்ஷன் உயர்வு.. ஹாப்பி நியூஸ் சொன்ன முதல்வர் ஸ்டாலின்!!

இன்றைய திராவிட மாடல் ஆட்சிக்கு நூறாண்டுகளுக்கு முன்பே வலுவான கொள்கை அடித்தளம் அமைத்த தியாகராயர் வழிநின்று தமிழ்நாட்டின் உயர்வுக்கு உழைப்போம் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ துரித நடவடிக்கை..! பேரவையில் முதல்வர் உறுதி..!