திருச்சி, தில்லை நகரில் உள்ள அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கேரளா மற்றும் மதுரையில் இருந்து வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சகோதரர்கள், சகோதரி, மகன் வீடுகளில் சோதனை நடைபெறும் நிலையில் நேரு வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னையில் அமைச்சர் கே.என்.நேருவின் மகனான பெரம்பலூர் எம்.பி. அருண் நேருவுக்கு சொந்தமான இடங்களிலும், அவரது சகோதரர் கே.என். ரவிச்சந்திரன் தொடர்புடைய டிவிஹெச் குழுமத்திற்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதனைத்தொடந்து, கோவையில் உள்ள டிவிஹெச் நிறுவனத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிறுவனத்தை மணிவண்ணன் கவனித்து வருகிறார். 3 கார்களில் வந்துள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமைச்சர் கே.என். நேருவின் மகன் கே.என்.அருண் நேருவுக்கு சொந்தமான சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜிஎஸ்என்ஆர் ரைஸ் இண்டஸ்ட்ரியல் பிடைவேட் லிமிடெட் நிறுவனத்திலும், அவரது சகோதரரான கே.என் ரவிச்சந்திரன் தொடர்புடைய டிவிஹெச் நொவெல்லா நியூ நிறுவனத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: 375 ஊராட்சிகள் நகராட்சிகளுடன் இணைகிறது.. சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என் நேரு அறிவிப்பு..!

டிவிஹெச் நிறுவனம் சென்னை, கோவை, திருச்சி உட்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. ட்ரூ வெல்யூ ஹோம் கட்டுமான நிறுவனம் கோவை திருச்சி சாலை, அவிநாசி சாலை உட்பட பல்வேறு இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்து வருகிறது.
அமைச்சர் கே.என்.நேரு தனது விவசாய நிலத்தில் ஊருக்குள் போடும் கான்கிரீட் ரோடு போட்டதும் சர்ச்சைக்கு உள்ளான நிலையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

இதற்கு முன்னர், இந்த நிறுவனங்களில் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சோதனையில்,ரூ.100 கோடி பணமும், 90 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.சோதனை முழுமையாக முடிவுற்ற பிறகே எதற்காக சோதனை நடத்தப்பட்டது என்பது குறித்த முழு விரவமும் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஊடக விளம்பரத்துக்கு தான் விஜய் திமுகவை குறை சொல்றாரு... கே.என்.நேரு பதிலடி..!