காங்கிரசின் பெரும் சொத்து...அரசியலின் முன்னோடி...இலக்கியவாதி… என குமரி ஆனந்தன் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்… 5 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து காங்கிரசின் தூணாக திகழ்ந்த குமரி அனந்தன் இன்று இல்லை என்பது பேரிழப்பு…

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் 1933 ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி குமரி ஆனந்தன் பிறந்தார். சுதந்திரப் போராட்ட தியாகி ஹரிகிருஷ்ணன் மற்றும் தங்கம்மாள் தம்பதிக்கும் மகனாக பிறந்த இவரின் இயற்பெயர் அனந்தகிருஷ்ணன் என்பதுதான். இதுவே பின்னர் குமரி அனந்தன் என்று அழைக்கப்பட்டது. குமரி அனந்தனுக்கு இருந்த தமிழ் மொழியின் மீதான ஆர்வம் காரணமாக தமிழில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை பெற்றார். இவருக்கு நான்கு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார். அதில் நம்மால் நன்கு அறியப்பட்ட பாஜகவைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜனும் ஒருவர்.
இதையும் படிங்க: காங்கிரஸ் மூத்த தலைவரும் தமிழிசையின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார்

சுதந்திரப் போராட்டத் தியாகியின் மகனான இவர் அகில இந்திய காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார். என் தொடர்ச்சியாக 1977 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து காந்தி காமராஜர் காங்கிரஸ் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கி 1980 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டுவிட்டு வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து 1984 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்றார்.

இதையடுத்து தன்னுடைய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சியை, காங்கிரஸ் கட்சியுடன் இணைத்த குமரி அனந்தன், 1989 மற்றும் 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி கண்டார். பின்னர் 1996 ஆம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்ட இவர், 'இலக்கியச் செல்வர்' என்று புகழப்பட்டார்.
கலித்தொகை இன்பம், படித்தேன், கொடுத்தேன், நல்லாட்சி தந்த நாயகன் காமராஜ் உள்ளிட்ட 25-க்கும் அதிகமான நூல்களை இயற்றியுள்ளார் குமரி அனந்தன். குமரி அனந்தனுக்கு 2024 ஆண்டு தமிழ்நாடு அரசு சார்பில் தகைசால் விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில், வயது மூப்பு காரணமாக குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கண்காணிப்பில் இருந்து வந்தார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமானதால் சென்னை வானகரத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குமரி அனந்தனின் மறைவு அரசியலில் ஈடு செய்ய முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அவரது உடல் விருகம்பாக்கத்தில் உள்ள தமிழிசை சௌந்தரராஜன் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. குமரி அனந்தன் மறைவுக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் சமூக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆளுநரின் மக்கள் விரோத செயல்பாடு.. பாஜகவுக்கு சவுக்கடி.. உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் செல்வபெருந்தகை!