திருப்பூர் மாநகரில் 1.20 டன் குப்பைகள் கொட்டிக் கிடக்கின்றன, அவற்றை அகற்ற வேண்டும் என ஈ.ஆர்.ஈஸ்வரன் கோரிக்கை விடுத்தார். அதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, இந்த ஆண்டு குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கிற திட்டம் கோவை மாநகரிலே தொடங்கியிருக்கிறது. அதற்கு தேவையான குப்பைகள் கோவையில் மட்டும் அல்ல, அருகில் இருக்கிற நகரங்களில் இருந்து அங்கு கொண்டு செல்ல வேண்டி இருக்கிறது. அதற்காகத்தான் கோவையிலும் மதுரையிலும் முதல் கட்டமாக இருக்கிற குப்பைகள் எல்லாம் சேகரித்து எரிபொருளாக்கி மின்சாரம் தயாரிக்க வேண்டும் என திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. எனவே கோயம்புத்தூரில் ஆரம்பிக்கும் போது திருப்பூரில் இருக்கிற குப்பைகள் நிச்சயமாக அதை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மா.செந்தில் குமார் குப்பைகளை அகற்றுவது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கும் அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்தார். இதுகுறித்து விளக்கிய அவர், கள்ளக்குறிச்சி நகராட்சி 15.87 சதுர கிலோமீட்டர் பரப்புள கொண்ட 21 வார்டுகளை கொண்டதாகும் கள்ளக்குறிச்சி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மக்கும் கழிவுகள் 12 மெட்ரிக் டனும் மக்காத கழிவுகள் 6.96 மெட்ரிக் டன் என மொத்தம் 18.96 மெட்ரிக் டன் கழிவுகள் சேகரமாகின்றன கள்ளக்குறிச்சி நகராட்சியில் நாலு மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மூணு எண்ணிக்கையிலான கம்போஸ்ட் மையங்கள் உள்ளன கள்ளக்குறிச்சி நகரில் தினமும் சேகரமாகும் கழிவுகள் மூணு மைக்ரோ கம்போஸ்ட் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மக்கும் கழிவுகளை இயற்கை உரமாக மாற்றும் செயல்முறையில் நடைபெற்று வருகிறது அவ்வாறு உரமாகும் இயற்கை உரங்கள் இலவசமாக விவசாய பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: டெல்லி பயணம் இதுக்குதான்... ரகசியத்தை போட்டுடைத்த எடப்பாடி!!

மேலும் மக்காத கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்ய ஏதுவாக நகராட்சியில் அமைந்துள்ள நாலு மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட ஒரு மறுசுழற்சி மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு. அங்கு முறையாக தரம் பறிக்கப்பட்டு, மறுசுழற்சி செய்யப்படுகிறது. இதில் பிளாஸ்டிக் கழிவுகள் தேக்கமின்றி உடனுக்குடன் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பப்படுகிறது. ஏற்கனவே ஒரு நாலு ஏக்கர்ல குப்பைகளை கொட்டி பயோ மைனிங் முறையில் அதை தரம்பிரித்துக் கொண்டிருக்கிறார்கள். மாவட்ட நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் குப்பையைக் கொட்டுவது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஊரை விட்டு தள்ளி ஒரு கிலோமீட்டர் 2 கிலோமீட்டர் தள்ளி ஒரு இடத்தை வந்து விளக்கி வாங்குவதற்காக உள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
இதையும் படிங்க: நிதிக்காக இனமானத்தை அடகு வைக்குற கொத்தடிமை நாங்க இல்ல.. முதல்வரின் ஃபயர் ஸ்பீச்..!