பங்குனி மாதத்தில் வரும் உத்திரம் நட்சத்திரம் சேரும் நாளை பங்குனி உத்திரம் என்கிறோம். இந்த நாளில் பல தெய்வீக திருமணங்கள் நிகழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன. அதனாலேயே இது திருமணங்களுடன் நெருங்கிய தொடர்புடைய நாளாகக் கருதப்படுகிறது.
இந்தாண்டிற்கான பங்குனி மாதம் உத்திர நட்சத்திரம் 2025 ஏப்ரல் 10 ஆம் தேதி அதாவது நேற்று பிற்பகல் 12 மணி 24 நிமிடத்திற்கு தொடங்கி, இன்று ஏப். 11 ஆம் தேதி பிற்பகல் 3 மணி 10 நிமிடத்திற்கு முடிவடைகிறது.

இந்த நந்நாளில் தானம் கொடுப்பது, தர்ம செயல்களில் ஈடுபடுவது மிகவும் புண்ணியமான காரியமாக கருதப்படுகிறது. இவ்வாறு செய்வதால், நம்முடைய பாவங்கள் நீங்கி, நற்பேறுகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இதையும் படிங்க: வருகின்ற 4-ம் தேதி மருதமலை கோயிலில் குடமுழுக்கு விழா.. கோயில் நிர்வாகம் அறிவிப்பு!
பங்குனி உத்திர நாளில், பல கோயில்களில் தீர்த்த யாத்திரை மற்றும் கும்பாபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெறும். குறிப்பாக, சிருபுலியூர் மற்றும் சிதம்பரம் கோவில்களில் இந்நாளில் திரளான பக்தர்கள் தீர்த்தம் ஆடி, இறைவனை வழிபடுவார்கள்.

அதனைத் தொடர்ந்து பங்குனி உத்திர நாளில், தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் சிறப்புப் பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக முருகன் கோயில்கள் மற்றும் சிவன் கோயில்களில் இந்த நாள் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும். கோயில்களில் திருக்கல்யாணம், அபிஷேகம், தீபாராதனை போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

இந்த நிலையில் முருகனின் அறுபடை திருப்பரங்குன்றம், பழனி, திருச்செந்தூர், திருத்தணி, மருதமலை, பலமுதிர் சோலை உள்ளிட்ட பல்வேறு முருகன் கோவில்களில் பக்தர்கள் அலைமோத சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கலகல சிரிப்பில் தீயை வைத்த திமுக ... பொன்முடி அதிரடி நீக்கம்… உச்சபட்ச கோபத்தில் மு.க.ஸ்டாலின்..!