கடலூர் மாவட்டம் அயன் கருவேப்பம்பாடி பகுதியை சேர்ந்த 28 வயதான கலையரசன் கடலூர் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணி புரிந்து வருகிறார்.
இவருக்கும் ஆடூர் அகரம் பகுதியைச் சேர்ந்த ஷாலினி என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது.

திருமணத்திற்கு முதல் நாளே ஷாலினி விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திட்டமிட்டப்படி திருமணம் நடந்தபோது முதலிரவுக்கு ஏற்பாடு செய்தபோதே ஷாலினி இந்த திருமணத்தில் எனக்கு விருப்பமில்லை என கலையரசனிடம் கூறியதாக தெரிகிறது.
இதையும் படிங்க: எங்கு திரும்பினாலும் அலறல் சத்தம்.. அடுத்தடுத்து மோதிக்கொண்ட ஆம்னி பேருந்துகள்..!!
இதுகுறித்து கேட்டபோது தான் ஒருவரை காதலித்து வந்ததால் தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததாக கூறியுள்ளார். தன் மனைவி மனம் மாறிவிடுவார் என நினைத்த கலையரன் ஷாலினியை அவரது வீட்டிற்கு அழைத்து சென்று விட்டுள்ளார்.
பிறகு மீண்டும் தனது வீட்டிற்கு அழைத்து வந்தார். அதன் பிறகும் ஷாலினி சந்தோஷமாக இல்லாத நிலையில், வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய களையரசனுக்கு மாசாவில் விஷம் வைத்து கொடுத்துள்ளார்.
தான் விஷம் வைத்து விட்டதாக கலையரசனிடமே கூறியுள்ளார் ஷாலினி. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மயங்கி விழுந்துள்ளார். கலையரசனை முதலில் குள்ளஞ்சாவடி மருத்துவமனைக்கும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்ததுடன் கலையரசனிடம் வாக்குமூலமும் பெற்றுள்ளனர். திருமணமான 16 வது நாளே குளிர்பானத்தில் கணவனுக்கு மனைவி விஷம் வைத்துக் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: மத்திய அரசுக்கு வரி தர முடியாது என்று சொல்ல ஒரு நொடி போதும்..! கடலூரில் முதல்வர் அதிர்ச்சி பேச்சு..!